சென்னை கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
சென்னை கிண்டியில் அமைந்துள்ள அண்ணா பல்கலைக்கழக வளாகத்திற்குள் அழகப்பா டெக்னாலஜி கல்லூரி இயங்கி வருகிறது. இங்கு நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த 18 வயது நிரம்பிய மாணவர் சபரீஸ்வரன் அழகப்பா கல்லூரி விடுதியில் தங்கி லெதர் டெக்னாலஜி பிரிவில் இரண்டாம் ஆண்டு படித்து வந்தார்.
இந்நிலையில் மாணவன் சபரீஸ்வரன் அழகப்பா கல்லூரி விடுதி அறையில் தூக்கிலிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து கல்லூரி நிர்வாகம் கோட்டூர்புரம் காவல் நிலையத்திற்கு தகவல் அளித்தது. இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் சபரீஸ்வரன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். Student commits suicide in Anna University campus
கல்லூரியில் படிக்க பிடிக்கவில்லை என்பதால் அவர் தற்கொலை செய்ததாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
தற்கொலைக்கான காரணம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். Student commits suicide in Anna University campus
