வேட்புமனுவை தாக்கல் செய்த கையோடு ரோடு ஷோவை தொடங்கிய ஸ்டாலின்

Published On:

| By Kavi

2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு கொளத்தூர் தொகுதியில் போட்டியிடும் முதல்வர் ஸ்டாலின் இன்று (மார்ச் 30) வேட்புமனு தாக்கல் செய்தார்.

செம்பியம் பகுதியில் உள்ள மாநகராட்சி அலுவலகத்தில் தேர்தல் அதிகாரி எஸ்.சாந்தியிடம் வேட்பு மனுவில் கையெழுத்திட்டு வழங்கினார் முதல்வர் ஸ்டாலின்.

ADVERTISEMENT

இதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய முதல்வரும் கொளத்தூர் வேட்பாளருமான மு.க.ஸ்டாலின், “கொளத்தூர் தொகுதி வாக்காளர்கள் திமுக வேட்பாளராக நிறுத்தப்பட்டிருக்கக்கூடிய என்னை அமோகமாக வெற்றி பெற வைப்பார்கள். எல்லா தொகுதிகளிலும் எப்போதும் போல எங்கள் பிரச்சாரம் வலுவாக இருக்கும். எத்தனை கூட்டணி வந்தாலும் திமுக கூட்டணிக்குதான் வெற்றி சாதகமாக இருக்கிறது” என்று கூறினார்.

வேட்புமனு தாக்கலை தொடர்ந்து திறந்தவெளி வேனில் நின்றவாறு மக்களை நோக்கி கையசைத்து ரோடு ஷோவில் ஈடுபட்டார் முதல்வர் ஸ்டாலின். அவருக்கு மேள தாள முழங்க உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

ADVERTISEMENT

நாளை தான் திருவாரூரில் பிரச்சாரத்தை தொடங்குவார் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், முதல்வர் ஸ்டாலின் இன்று ரோடு ஷோ செய்து பிரச்சாரத்தை தொடங்கிவிட்டார்.

தொடர்ந்து கொளத்தூர் தொகுதிக்கு சென்றார் திமுக தலைவர் ஸ்டாலின். அங்கு திமுகவின் தேர்தல் அறிக்கையை அறிமுகம் செய்து வைத்தார்.

ADVERTISEMENT

இன்று மாலை கொளத்தூர் தொகுதியில் தவெக தலைவர் விஜய் பிரச்சாரத்தில் ஈடுபடவிருக்கும் நிலையில், அதற்கு முன்னதாகவே தனது தொகுதிக்கு சென்றுவிட்டார்.

கொளத்தூர் தொகுதிகளில் 3 முறை ஹாட்ரிக் வெற்றி பெற்ற முதல்வர் ஸ்டாலின் 4 ஆவது முறையாக களமிறங்குகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share