ராமதாஸ் Vs அன்புமணி… திமுக கூட்டணியில் பாமக? – ஸ்டாலின் பதில்!

Published On:

| By Selvam

திமுக கூட்டணி மிகவும் வலுவாகவும், உறுதியாகவும் உள்ளது என்று முதல்வர் ஸ்டாலின் இன்று (ஏப்ரல் 20) தெரிவித்துள்ளார். Stalin dmk alliance firm

டைம்ஸ் ஆஃப் இந்தியா ஆங்கில நாளிதழுக்கு முதல்வர் ஸ்டாலின் அளித்துள்ள பேட்டி…

அதிமுக – பாஜக கூட்டணி குறித்து உங்கள் கருத்து?

திமுக கூட்டணியால் இரண்டு முறை தோற்கடிக்கப்பட்ட கூட்டணி தான் அதிமுக – பாஜக கூட்டணி. 2024 மக்களவைத் தேர்தலின் போது இரு கட்சிகளும் தனித்தனியாக களமிறங்கினாலும், அவர்கள் இன்னும் ரகசிய கூட்டணியில் இருப்பதை நான் சுட்டிக்காட்டியிருந்தேன். சமீபத்திய நிகழ்வுகள் அதை அம்பலப்படுத்தியுள்ளன.

தமிழக மக்கள், மூன்றாவது முறையாக, நமது மாநிலத்தை ஏமாற்றிய பாஜகவையும், அவர்களுடன் கூட்டணி வைத்து மாநிலத்தை காட்டிக் கொடுத்த அதிமுகவையும் தோற்கடிப்பார்கள்.

விசிக, சிபிஐ மற்றும் சிபிஎம் ஆகியவை திமுக அரசை விமர்சிப்பது குறித்து உங்கள் கருத்து என்ன?

கூட்டணிக் கட்சிகளின் ஒத்துழைப்புடன், அவர்களின் ஆலோசனைகள் மற்றும் ஆக்கபூர்வமான விமர்சனங்களைக் கேட்டு இந்த அரசாங்கம் பல முயற்சிகளை மேற்கொண்டுள்ளது. கூட்டணி கட்சிகளின் ஆக்கபூர்வமான விமர்சனங்களை நான் எப்போதும் மதிக்கிறேன்.

செந்தில் பாலாஜி அமைச்சராக தொடர்வது குறித்து உச்ச நீதிமன்றம் கடுமையான கருத்தை தெரிவித்துள்ளது. அரசின் நிலைப்பாடு என்ன?

இந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் விசாரணையில் இருப்பதால், இந்தக் கேள்விக்கு பதிலளிப்பது பொருத்தமாக இருக்காது.

பாமக திமுக கூட்டணிக்கு வரக்கூடும், விசிக அதிமுக கூட்டணிக்கு சென்றுவிடும் என்று சில பேச்சுக்கள் எழுந்துள்ளது. அதனால் தான் ராமதாஸ், அன்புமணி இடையே உரசல் ஏற்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறதே?

இந்த ஊகங்களை புறக்கணித்து விடுங்கள். திமுக கூட்டணி வலுவாகவும், உறுதியாகவும் உள்ளது. Stalin dmk alliance firm

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share