முதல்வர் ஸ்டாலின் ஃபியட் செலக்ட் விண்டேஜ் காரை ஓட்டி மகிழ்ந்துள்ளார்.
முதல்வர் ஸ்டாலின் தினசரி காலை, நடைப்பயிற்சி செல்வது வழக்கம். அந்த வகையில் இன்று ஈசிஆர் பகுதியில் நடைபயிற்சி மேற்கொண்டிருந்தார். அப்போது ஃபியட் செலக்ட் காரை தானே இயக்கி சென்றுள்ளார்.
இதுகுறித்த வீடியோவை அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா இன்று (ஜனவரி 10) தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
அந்த பதிவில் , “நமது அன்பிற்குரிய முதல்வர் ஸ்டாலின் பக்கத்து வீட்டுக்காரரை போல மிகவும் அமைதியான பணிவான மனிதர்.
இந்த குளிர்காலத்தில் இதமான காலை வேளையில் நிதானமாக நடைப்பயிற்சி செய்வது, ஈ.சி.ஆர் சாலையில் சைக்கிள் ஓட்டுவது, சாதாரணமாக காரில் பயணம் செய்வது போன்ற வாழ்க்கையின் எளிய இன்பங்களையே முதல்வர் விரும்புகிறார். இன்று காலை அவர் இந்த அழகான ‘ஃபியட் செலக்ட்’ காரை சாதாரணமாக ஓட்டி மகிழ்ந்தார். ஃபியட் கார்கள் மீது எப்போதும் முதல்வர் ஸ்டாலினுக்கு ஒரு பிரியம் உண்டு.” என்று கூறியுள்ளார்.
தற்போது இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
