உடுமலை பேட்டையில் 1426.89 கோடி மதிப்பீட்டில் 19,785 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கிய முதல்வர் ஸ்டாலின், திருப்பூர் மாவட்டத்துக்கு 7 புதிய திட்டங்களையும் அறிவித்தார்.
திருப்பூர் மாவட்டம் உடுமலைபேட்டையில் நேதாஜி மைதானத்தில் நடைபெற்ற நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை, நீர்வளத்துறை, பேரூராட்சிகள் துறை, தொழில் முதலீடு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத்துறை, வனத்துறை, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை, பால்வளத்துறை, கூட்டுறவு, உணவு பாதுகாப்புத் துறை உள்ளிட்ட துறைகளின் சார்பில் முடிவுற்ற திட்டப்பணிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்க உள்ளார்.
நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை, வேளாண்மை உழவர் நலத்துறை, பேரூராட்சிகள் துறை உள்ளிட்ட துறைகளின் சார்பில் புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார் உள்ளார்.
இதைத்தொடர்ந்து வருவாய்த்துறை சார்பில் இலவச வீட்டு மனை பட்டாக்கள், ஊராட்சி துறையின் சார்பில் கலைஞரின் கனவு இல்ல ஆணைகள், மகளிர் திட்டம், தோட்டக்கலைத் துறை, தொழிலாளர் நலத்துறை, மாற்றுத்திறனாளிகள் நலத் துறை, கூட்டுறவுத்துறை, சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை, வேளாண்மை துறை, ஆதிதிராவிடர் மற் றும் பழங்குடியினர் நலத்துறை, தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் உள்ளிட்ட பல்வேறு துறைகள் சார்பில் 1426.89 கோடி மதிப்பீட்டில் 19,785 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
விழாவில் பேசிய முதல்வர் திருப்பூர் மாவட்ட மக்கள் பயனடையும் வகையில் புதிய திட்டங்களையும் அறிவித்தார்.
புதிய திட்டங்கள் குறித்த விபரங்கள்
- நீராறு, நல்லாறு, ஆனைமலையாறு திட்டப்பணிகளை செயல்படுத்துவது குறித்து கேரள அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு விரைவில் செயல்படுத்தப்படும்.
- பரம்பிக்குளம் ஆழியாறு பாசனப்பகுதியை தூர்வார ரூ.10 கோடி நிதி இந்த ஆண்டே ஒதுக்கப்படும்.
- திருப்பூரில் மாணவர்கள் இளைஞர்கள் பயன்பெறும் வகையில் நவீன வசதிகளுடன் மாவட்ட மைய நூலகம் அமைக்கப்படும். ரூ.5 கோடியில் பல்நோக்கு விளையாட்டு அரங்கம் உருவாக்கப்படும்
- காங்கயம் பகுதியில் குடிநீர் வடிகால் பணிகளுக்கு 11 கோடி செலவில் புதிய திட்டங்கள் செயல்படுத்தப்படும்.
- தாராபுரம் அருகே உப்பாற்றின் குறுக்கே ரூ.7.5 கோடியில் புதிய தடுப்பணை கட்டப்படும்.
- ஊத்துக்குளியில் ரூ.6.5 கோடியில் புதிய வெண்ணெய் தொழிற்சாலை அமைக்கப்படும்.
- உடுமலையைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் சாதிக்பாட்ஷா பெயர், பைபாஸ் சாலைக்கு சூட்டப்படும்.
- அமராவதி கூட்டுறவு சர்க்கரை ஆலையை செயல்படுத்தும் வகையில் வல்லுநர் குழு அமைக்கப்பட்டு நிச்சயமாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.