தமிழ்நாடு உடற்கல்வியியல் மற்றும் விளையாட்டு பல்கலைக்கழக சட்ட திருத்த மசோதா விவகாரத்தில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு வழக்கு தொடர்ந்துள்ளது.
தமிழ்நாடு உடற்கல்வியியல் மற்றும் விளையாட்டு பல்கலைக்கழக சட்ட திருத்த மசோதா ஆளுநரின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்த மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்காமல் குடியரசுத் தலைவருக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி அனுப்பி வைத்துள்ளார்.
தமிழக ஆளுநரின் இந்த முடிவுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு வழக்கு தொடர்ந்துள்ளது.
தமிழக சட்டமன்றத்தில் நிறைவேற்றப்படும் மசோதாக்களுக்கு ஒப்புதல் தராமல் ஆளுநர் இழுத்தடித்தது தொடர்பான வழக்கில்தான் உச்சநீதிமன்றம் ஏற்கனவே வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பை வழங்கியது. மாநில சட்டமன்றங்கள் நிறைவேற்றும் மசோதாக்கள் மீது ஆளுநர் மற்றும் குடியரசுத் தலைவர் முடிவெடுக்க கால வரம்பு நிர்ணயித்து உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்த நிலையில் தற்போது தமிழக அரசு, மீண்டும் உச்சநீதிமன்றத்தின் கதவுகளை தட்டி உள்ளது.