ADVERTISEMENT

களைகட்டும் தீபாவளி கொண்டாட்டம்.. கோவை போத்தனூர் வழியே சிறப்பு ரயில்கள் இயக்கம்!

Published On:

| By Pandeeswari Gurusamy

Special trains running via Podanur

தீபாவளி பண்டிகை கொண்டாட்டங்கள் களைகட்டி உள்ள நிலையில் பொதுமக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல ஆர்வம் காட்டி வருகின்றனர். இந்நிலையில் கோவை போத்தனுார் – சென்னை, சென்னை – மங்களூரு, திருவனந்தபுரம் – சென்னை எழும்பூர் இடையே சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என, தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.

கோவை போத்தனுார் – சென்னை சென்ட்ரல் (06044) சிறப்பு ரயில், 19ம் தேதி இரவு 11.20 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 8.45 மணிக்கு சென்னை சென்ட்ரல் சென்றடையும். சென்னை சென்ட்ரல் – போத்தனுார் (06043) சிறப்பு ரயில், 22ம் தேதி மதியம் 12.15 மணிக்கு சென்னை சென்ட்ரலில் இருந்து புறப்பட்டு, அன்றிரவு 10 மணிக்கு போத்தனுார் வந்தடையும். திருப்பூர், ஈரோடு, சேலம், ஜோலார்பேட்டை, காட்பாடி, அரக்கோணம் ஆகிய ரயில்வே ஸ்டேஷன்களில் நின்று செல்லும் இந்த சிறப்பு ரயிலில் ஏ.சி., மூன்றடுக்கு, மூன்றடுக்கு (எக்கானமி), படுக்கை வசதி பெட்டிகள் இணைக்கப்பட்டிருக்கும்.

ADVERTISEMENT

சென்னை சென்ட்ரல் – மங்களூரு(06001) சிறப்பு ரயில், சென்னை சென்ட்ரலில் இருந்து, 20ம் தேதி மதியம் 12.15 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் காலை 8 மணிக்கு மங்களூரு சென்றடையும். மங்களூரு – சென்னை சென்ட்ரல்(06002) சிறப்பு ரயில், மங்களூருவில் இருந்து, 21ம் தேதி மாலை 4.35 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் காலை 10.15 மணிக்கு சென்னை சென்ட்ரல் சென்றடையும். அரக்கோணம், காட்பாடி, ஜோலார்பேட்டை, சேலம், ஈரோடு, திருப்பூர், போத்தனுார், பாலக்காடு, சொரனுார், திரூர், கோழிக்கோடு, மாஹி, தலசேரி, கண்ணுார், காசர்கோடு ஆகிய ரயில்வே ஸ்டேஷன்களில் நின்று செல்லும் இந்த சிறப்பு ரயிலில் ஏ.சி., மூன்றடுக்கு, மூன்றடுக்கு(எக்கானமி), படுக்கை வசதி பெட்டிகள் இணைக்கப்பட்டிருக்கும்.

திருவனந்தபுரம் வடக்கு – சென்னை எழும்பூர்(06108) சிறப்பு ரயில், திருவனந்தபுரம் வடக்கில் இருந்து, 21ம் தேதி மாலை 5.10 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் காலை 11 மணிக்கு சென்னை எழும்பூர் சென்றடையும். சென்னை எழும்பூர் – திருவனந்தபுரம் வடக்கு(06107) சிறப்பு ரயில் சென்னை எழும்பூரில் இருந்து, 22ம் தேதி மதியம் 1.25 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் காலை 8 மணிக்கு திருவனந்தபுரம் வடக்கு சென்றடையும். வர்காலா, கொல்லம், காயாம்குளம், மாவேலிகரா, கோட்டயம், எர்ணாகுளம் டவுன், பாலக்காடு, போத்தனுார், திருப்பூர், ஈரோடு, சேலம், ஜோலார்பேட்டை, காட்பாடி, அரக்கோணம், திருவள்ளூர், பெரம்பூர் ஆகிய ரயில்வே நிறுத்தங்களில் நின்று செல்லும் இந்த சிறப்பு ரயிலில் ஏ.சி., மூன்றடுக்கு, படுக்கை வசதி பெட்டிகள் இணைக்கப்பட்டிருக்கும்.

ADVERTISEMENT
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share