ADVERTISEMENT

ரயில் பயணிகள் கவனத்திற்கு.. தீபாவளி சிறப்பு ரயில்களை அறிவித்தது தெற்கு ரயில்வே!

Published On:

| By Pandeeswari Gurusamy

Southern Railway announces special trains for Diwali

நாடு முழுவதும் தீபாவளி பண்டிகை கொண்டாட்டங்கள் சூடு பிடிக்கத் தொடங்கி உள்ளது. தீபாவளியை முன்னிட்டு சிறப்பு ரயில்கள் இயக்கப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

இதுகுறித்து தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,

ADVERTISEMENT
  • தாம்பரம் – செங்கோட்டை இடையே தீபாவளி சிறப்பு ரெயில் இயக்கப்படுகிறது. தாம்பரத்தில் இருந்து நாளை (அக்டோபர் 17) இரவு 7.30 மணிக்கு புறப்படும் இந்த சிறப்பு ரெயில் (வ.எண் 06013) மறுநாள் காலை 7.30 மணிக்கு செங்கோட்டையை சென்றடைகிறது. மறுமார்க்கத்தில் செங்கோட்டையில் இருந்து 20-ந்தேதி (தீபாவளி அன்று) இரவு 8.45 மணிக்கு புறப்படும் சிறப்பு ரெயில் (06014) மறுநாள் காலை 9.45 மணிக்கு தாம்பரத்தை வந்தடையும். இதில் 1 ஏ.சி. இருக்கை வசதி பெட்டி, 11 இருக்கை வசதி பெட்டி, 4 பொதுப் பெட்டி, 2 இரண்டாம் வகுப்பு பெட்டி என மொத்தம் 18 பெட்டிகள் இணைக்கப்பட்டுள்ளது. இதற்கான முன்பதிவு இன்று மாலை 4 மணிக்கு தொடங்கியது.
  • சென்னை எழும்பூரில் இருந்து மதுரைக்கு முன்பதிவில்லாத சிறப்பு மெமு ரெயில் இயக்கப்படுகிறது. சென்னை எழும்பூரில் இருந்து நாளை (அக்டோபர் 17) இரவு 11.45 மணிக்கு புறப்படும் இந்த சிறப்பு ரெயில் (06161) மறுநாள் காலை 10.15 மணிக்கு மதுரையை சென்றடையும். மெமு ரெயிலான இந்த ரெயிலில் மொத்தம் 12 பெட்டிகள் இணைகக்கப்பட்டிருக்கும். இந்த ரெயில் மயிலாடுதுறை, கும்பகோணம், திருச்சி வழியாக இயக்கப்படும்.
  • மதுரையில் இருந்து தாம்பரத்திற்கு 18-ந்தேதி முன்பதிவில்லாத சிறப்பு மெமு ரெயில் இயக்கப்படுகிறது. மதுரையில் இருந்து மதியம் 12 மணிக்கு புறப்படும் இந்த ரெயில் அன்று இரவு 7.15 மணிக்கு தாம்பரத்தை வந்தடைகிறது. அதேபோல், சென்னை எழும்பூரில் இருந்து மதுரைக்கு 18-ந்தேதி முன்பதிவில்லாத சிறப்பு மெமு ரெயில் இயக்கப்படுகிறது. அன்று இரவு 11.45 மணிக்கு சென்னை எழும்பூரில் இருந்து புறப்படும் இந்த ரெயில் மறுநாள் காலை 11.30 மணிக்கு மதுரையை சென்றடையும்.
  • மதுரையில் இருந்து தாம்பரத்திற்கு 21-ந்தேதி இரவு 8.30 மணிக்கு முன்பதிவில்லாத சிறப்பு மெமு ரெயில் இயக்கப்படுகிறது. இந்த ரெயில் மறுநாள் காலை 4.30 மணிக்கு தாம்பரத்தை சென்றடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share