திருப்பதி மற்றும் சபரிமலைக்கான சிறப்பு ரயில்கள் குறித்த அறிவிப்பை ரயில்வே நிர்வாகம் வெளியிட்டுள்ளது.
- நவம்பர் 18 முதல் ராமேஸ்வரம் மற்றும் திருப்பதி இடையே ஒரு புதிய கூடுதல் சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது.
- மகாராஷ்டிரா, தமிழ்நாடு மற்றும் கேரளாவை இணைக்கும் வகையில் சபரிமலை ஐயப்ப பக்தர்களுக்காக. நவம்பர் 20, 27 மற்றும் டிசம்பர் 4, 11, 18, 25 ஆகிய தேதிகளிலும், ஜனவரி 1, 8, 15 ஆகிய தேதிகளிலும் சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன. திருச்சி, மதுரை, தென்காசி வழியாக இந்த ரயில் சேவைகள் இயக்கப்படும்.
- தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அக்டோபர் 16 முதல் 22 வரை 147 சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டன. இதில் சென்னை, கோவை, திண்டுக்கல், கன்னியாகுமரி உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் இருந்து சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டன. இருப்பினும், பயணிகளின் வரவேற்பு இல்லாத காரணத்தால், தற்போது 6 சிறப்பு ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
- திருச்சி மற்றும் தாம்பரம் இடையே இயக்கப்படும் சிறப்பு ரயில் திருவெறும்பூர் ரயில் நிலையத்திலும் இனி நின்று செல்லும்
