மின் கட்டணம் செலுத்துதல் மற்றும் மின்சாரம் தொடர்பான புகார்களை தெரிவிக்க மின்சார வாரியம் சிறப்பு ஏற்பாட்டைச் செய்துள்ளது. Special camp for electricity bill complaints
தமிழகத்தில் மின் கட்டணம், மின் இணைப்பு, தவறான பில் வழங்குதல் என மின்சாரம் தொடர்பாக பல்வேறு புகார்கள் எழுகின்றன.
இதற்காக, தமிழ்நாடு மின்சார வாரியம் ‘TANGEDCO’ என்ற புதிய மொபைல் செயலியை அறிமுகம் செய்தது.
இந்தநிலையில் இதை பயன்படுத்த தெரியாதோருக்கும், அல்லது விரைவில் புகாருக்கு தீர்வு காண விரும்புவோருக்கும் ஒரு அறிவிப்பை மின் வாரியம் இன்று (ஏப்ரல் 2) வெளியிட்டுள்ளது.
அதில், “மின் நுகர்வோர் மற்றும் பொதுமக்களிடமிருந்து பெறப்படும் மின் கட்டணத் தொகை, மின் மீட்டர்கள், குறைந்த மின்னழுத்தம், சேதமடைந்த மின் கம்பங்கள் மாற்றுதல் உள்ளிட்ட அனைத்து மின்சாரம் தொடர்பான புகார்கள் இருப்பின், அவற்றை நிவர்த்தி செய்யும் பொருட்டு, வரும் 05.04.2025 சனிக்கிழமை அன்று காலை 11.00 மணி முதல் மாலை 05.00 மணி வரை தமிழகத்தில் உள்ள அனைத்து மின்வாரிய செயற்பொறியாளர்கள்/இ&ப (Executive Engineer/O&M Office) அலுவலங்களிலும் ஒரு நாள் சிறப்பு முகாம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
அன்றைய தினம் பெறப்படும் மின் மீட்டர்கள். குறைந்த மின்னழுத்தம், சேதமடைந்த மின் கம்பங்கள் மாற்றுதல் உள்ளிட்ட அனைத்து மின்சாரம் தொடர்பான புகார்கள் மீது உடனடியாக தீர்வு காணப்பட்டு நுகர்வோர் மற்றும் பொதுமக்களுக்கு தீர்வு தொடர்பான விவரங்கள் தெரிவிக்கப்படும்” என்று கூறப்பட்டுள்ளது. Special camp for electricity bill complaints