’முத்தம் எனக்கா? ஸ்ரீலீலாக்கா?’ ஷூட்டிங் ஸ்பாட்டில் ரசிகரை கலாய்த்த சிவகார்த்திகேயன்

Published On:

| By christopher

sk reation on fan kiss to sreeleela

அமரன் பட வெற்றியைத் தொடர்ந்து பிரபல இயக்குநர் சுதா கொங்கரா இயக்கத்தில் முதல் முறையாக நடித்து வருகிறார் சிவகார்த்திகேயன். sk reation on fan kiss to sreeleela

இந்த படத்திற்கு பராசக்தி என பெயரிடப்பட்டுள்ளது. சமீபத்தில் வந்த இப்படத்தின் டைட்டில் டீசர் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது.

ADVERTISEMENT

இந்த படத்தில் ஜெயம் ரவி, ஸ்ரீலீலா, அதர்வா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள்.

கடந்த சில நாட்களாக பராசக்தி படத்தின் படப்பிடிப்பு சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதுதொடர்பாக அடிக்கடி வெளியாகி வரும் வீடியோவும் ரசிகர்களை மகிழ்ச்சியடைய செய்துள்ளது.

ADVERTISEMENT

இந்த நிலையில் சிவகார்த்திகேயன் மற்றும் ஸ்ரீலீலா ஆகியோர் படப்பிடிப்பிற்காக காத்திருக்கும்போது, ரசிகர் ஒருவர் பிளையிங் கிஸ் கொடுத்துள்ளார். அதனை கண்டு, ‘இது யாருக்கு? எனக்கா? ஸ்ரீலீலாக்கா?’ என கேள்வியெழுப்பி ரசிகரை கலாய்த்தார்.

https://twitter.com/_mohan_raj_a/status/1888492161571955043

இந்த வீடியோ தற்போது சமூகவலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

ADVERTISEMENT
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share