தவெக தலைவர் விஜய், சிபிஐ விசாரணைக்காக டெல்லிக்கு இன்று தனி விமானத்தில் சென்றுள்ளார். விஜய்யுடன் தவெக பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜூனா உள்ளிட்ட 6 பேர் டெல்லி சென்றுள்ளனர்.
41 பேர் பலியான கரூர் துயர சம்பவம் தொடர்பான சிபிஐ விசாரணைக்கு ஆஜராக, விஜய் சென்னையில் இருந்து இன்று காலை 8.00 மணிக்கு தனி விமானத்தில் டெல்லி புறப்பட்டுச் சென்றார்.
விஜய்யுடன், தவெகவின்
- தேர்தல் மேலாண்மை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜூனா
- இணைப் பொதுச்செயலாளர் நிர்மல் குமார்
- விஷ்ணு ரெட்டி
- ஜெகதீஷ் பழனிசாமி
- சி.ராஜமோகன்
- நயீம் (Nayeem Ayittandy Koovakandy)
ஆகியோர் தனி விமானத்தில் டெல்லி சென்றுள்ளனர்.
விஜய்யுடன் தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் டெல்லி சென்றுள்ளதாக கூறப்பட்டது. ஆனால் விஜய்யுடன் அவர் செல்லவில்லை.
டெல்லியில் இன்று காலை சிபிஐ அதிகாரிகள் முன்பாக விஜய் ஆஜராகிறார். அவரிடம் கரூர் பிரசார கூட்டம் தொடர்பாக பல்வேறு கேள்விகளை கேட்டு பதில்களைப் பெற இருக்கின்றனர் சிபிஐ அதிகாரிகள். இந்த விசாரணை 2 நாட்கள் நடைபெறலாம் என கூறப்படுகிறது. டெல்லியில் விஜய்க்கு டெல்லி போலீசார் பாதுகாப்பு வழங்குகின்றனர்.
