இந்திய தேர்தல் ஆணையத்தின் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் (SIR) மூலமாக பல கோடி மக்களின் வாக்குரிமை கேள்விக்குறியாகி உள்ளதாக முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
SIR தொடர்பாக திமுக மாவட்ட செயலாளர்கள், எம்.பிக்கள், எம்.எல்.ஏக்கள், தொகுதி பொறுப்பாளர்கள் ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது.
இந்தக் கூட்டம் தொடர்பாக தமது எக்ஸ் பக்கத்தில் முதல்வர் ஸ்டாலின் பதிவிட்டுள்ளதாவது: தமிழ்நாட்டைச் சூழ்ந்துள்ள SIR ஆபத்து: கேள்விக்குறியாகியுள்ள பல கோடி மக்களின் வாக்குரிமை
நம் மக்களின் வாக்குரிமையைப் பாதுகாக்க, கழகத்தினர் கண்ணும் கருத்துமாக இருந்து மேற்கொள்ள வேண்டிய அவசர நடவடிக்கைகள் குறித்தும்,
வரும் 11-ஆம் நாள் அனைத்து மாவட்டத் தலைநகரங்களிலும் #SIR-க்கு எதிரான கண்டன ஆர்ப்பாட்டங்களைக் கூட்டணிக் கட்சிகளுடன் இணைந்து வெற்றிகரமாக நடத்திடவும்,
இன்றைய மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் அறிவுறுத்தல்களை வழங்கினேன்.
சிறப்புத் தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தம் எனும் சதி வலையில் சிக்காமல் நம் மக்களைக் காக்க வேண்டிய பொறுப்பு கழக நிர்வாகிகள் ஒவ்வொருவருக்கும் உள்ளது! அனைத்து வாக்குச்சாவடிகளிலும் கண்காணிப்பை பலப்படுத்துவோம், கடமையாற்றுவோம். இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
