ADVERTISEMENT

வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் SIR: திமுக மா.செ.க்கள் கூட்டத்தில் ஆலோசனை

Published On:

| By Mathi

DMK Meeting SIR

இந்திய தேர்தல் ஆணையத்தின் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் (SIR) தொடர்பாக விவாதிக்க திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் அக்கட்சித் தலைவரும் முதல்வருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று நடைபெற்றது.

தமிழகம் முழுவதும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதற்கான விண்ணப்ப படிவங்கள், வீடுகள் தோறும் வழங்கப்பட்டு வருகின்றன.

ADVERTISEMENT

இந்த விண்ணப்ப படிவங்களை எப்படி பூர்த்தி செய்வது என்பது தொடர்பாக அரசியல் கட்சிகள் தங்களது பூத் முகவர்கள் மூலம் பொதுமக்களுக்கு வழிகாட்டி வருகின்றன. திமுகவின் தொகுதி பொறுப்பாளர்களும் அந்தந்த சட்டமன்ற தொகுதிகளில் முகாமிட்டு ஒவ்வொரு பூத்தாக சென்று SIR விண்ணப்ப படிவத்தை எப்படி பூர்த்தி செய்து தர வேண்டும் என பொதுமக்களிடம் விளக்கம் அளித்து வருகின்றனர்.

இந்த SIR செயல்பாடுகளில் பல்வேறு குழப்பங்கள் இருப்பதாக கூறி நவம்பர் 11-ந் தேதி தமிழகம் முழுவதும் திமுக கூட்டணி கட்சிகள் கண்டன ஆர்ப்பாட்டத்தை நடத்துவதாக அறிவித்துள்ளன.

ADVERTISEMENT

இந்தப் பின்னணியில் SIR குறித்து விவாதிக்க சென்னையில் திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் சென்னையில் இன்று நடைபெற்றது. திமுக தலைவரும் முதல்வருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் இக்கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் திமுக மாவட்ட செயலாளர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் சட்டமனற தொகுதிகளின் பொறுப்பாளர்கள் பங்கேற்றனர். SIR செயல்பாடுகள் குறித்து இந்த கூட்டத்தில் விவாதிக்கப்பட்டு ஆலோசனைகள் வழங்கப்பட்டன..

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share