கேரளாவில் தேர்தல் ஆணையத்தின் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணியில் ஈடுபட்டிருந்த வாக்குச்சாவடி நிலை அலுவலர் (BLO) ஒருவரின் தற்கொலைச் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
தமிழ்நாடு, கேரளா உள்ளிட்ட 12 மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தமான SIR மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
கேரளாவில் இப்பணியில் ஈடுபட்டிருந்தகண்ணூர் மாவட்டத்தைச் சேர்ந்த 44 வயது பூத் நிலை அதிகாரி அனீஷ் ஜார்ஜ் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.
வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் (SIR) பணிகளினால் ஏற்பட்ட கடுமையான மன அழுத்தத்தால் நேற்று நவம்பர் 16-ந் தேதி அனீஷ் ஜார்ஜ் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.
SIR பணி நெருக்கடியால் அனீஷ், மன உளைச்சலில் இருந்ததாகவும் இதனால் அவர் தற்கொலை செய்து கொண்டார் என்றும் அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
