தமிழகம் மிக கடுமையாக எதிர்த்து வரும், காவிரியின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்டும் தங்களது மாநில அரசின் திட்டத்துக்கு மத்திய அரசு விரைவாக ஒப்புதல் தர வேண்டும் என பிரதமர் மோடியிடம் கர்நாடகா முதல்வர் சித்தராமையா நேரில் வலியுறுத்தினார்.
மேகதாது அணை கட்டுவதால் தமிழ்நாட்டுக்கான காவிரி நதிநீர் உரிமை பறிபோகும். இதனால் தமிழக அரசு இதனை கடுமையாக எதிர்த்து வருகிறது.
இதனிடையே மேகதாது அணை கட்ட்வதற்கான விரிவான திட்ட அறிக்கையை கர்நாடகா அரசு தயார் செய்ய உச்சநீதிமன்றம் அனுமதித்தது. இது தொடர்பான தமிழக அரசு மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
இந்த நிலையில் டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியை கர்நாடகா முதல்வர் சித்தராமையா நேற்று சந்தித்து பேசினார். இந்த சந்திப்பின் போது, கர்நாடகாவின் மேகதாது அணை திட்டத்துக்கு மத்திய அரசு விரைவாக ஒப்புதல் தர வேண்டும் என பிரதமர் மோடியிடம் சித்தராமையா வலியுறுத்தினார்.
