இந்திய T20 அணியில் இருந்து ஷுப்மன் கில் நீக்கப்பட்டுள்ளார். அவருக்குப் பதிலாக அக்சர் படேல் துணை கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.
T20 உலகக் கோப்பை மற்றும் நியூசிலாந்துக்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட T20ஐ தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த T20ஐ தொடர் ஜனவரி 21 அன்று நாக்பூரில் தொடங்குகிறது. இது பிப்ரவரி 6 அன்று தொடங்கும் உலகக் கோப்பைக்கு முன் இந்திய அணியின் கடைசி போட்டியாக அமையும்.
இந்த அணித் தேர்வு பலரை ஆச்சரியப்படுத்தியுள்ளது. ஸ்டார் வீரர் ஷுப்மன் கில் அணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். அவருக்குப் பதிலாக, SMAT இறுதிப் போட்டியில் ஹரியானாவுக்கு எதிராக சிறப்பாக விளையாடிய இஷான் கிஷன் அணியில் சேர்க்கப்பட்டிருக்கிறார். ஷுப்மன் கில்லுக்குப் பதிலாக அக்சர் படேல் அணியின் புதிய துணை கேப்டனாக நியமிக்கப்பட்டார்.
ஷுப்மன் கில் இந்தியாவின் டி20 உலகக் கோப்பை 2026 அணியில் இருந்து ஷுப்மன் கில் நீக்கப்பட்டுள்ளார். இதற்கு முக்கிய காரணங்களாக அவரது சமீபத்திய ஃபார்ம் மற்றும் அணியின் தேவைகள் சுட்டிக்காட்டப்பட்டுள்ளன. இந்த முடிவால், அக்சர் படேல் அணியின் துணை கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்திய அணியின் தேர்வுக் குழு தலைவர் அஜித் அகர்கர் கூறுகையில், “கில் கடந்த உலகக் கோப்பையிலும் விளையாடவில்லை. அப்போது வேறு காம்பினேசனை நாங்கள் தேர்ந்தெடுத்தோம். ஆனால் இப்போது, 15 வீரர்களைத் தேர்ந்தெடுக்கும்போது யாராவது ஒருவர் வெளியேற வேண்டியிருக்கும். துரதிர்ஷ்டவசமாக, தற்போது அது கில் தான்” என்று தெரிவித்திருக்கிறார்.
மேலும், “2024 டி20 உலகக் கோப்பை தொடருக்குப் பிறகு நாங்கள் இலங்கைக்குச் சென்றோம். அப்போது 200 ரன்கள் அடித்தோம். அதில் கில் இருந்தார். நாங்கள் டாப் ஆர்டரில் ஒரு விக்கெட் கீப்பரை விரும்பினோம். ரிங்கு அல்லது வாஷிங்டன் சுந்தர் ஆகியோர் மிடில் ஆர்டரில் இருப்பார்கள். அதனால்தான் டாப் ஆர்டரில் ஒரு கூடுதல் விக்கெட் கீப்பர் இருக்கிறார். அதேநேரம் ஷுப்மன் கில்லின் ஃபார்ம் பற்றி எந்த கேள்வியும் இல்லை” என்று அணி கேப்டன் சூர்யகுமார் யாதவ் கூறியுள்ளார்.
கில்லுக்குப் பதிலாக அணியில் சேர்க்கப்பட்டுள்ள அக்சர் படேல் இந்திய டி20ஐ அணியின் துணை கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். இவர் ஐபிஎல் தொடரில்ல் டெல்லி கேப்பிடல்ஸ் அணியின் கேப்டனாகவும் உள்ளார். இவர் நியூசிலாந்துக்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட டி20ஐ தொடரிலும், டி20 உலகக் கோப்பை தொடரிலும் அணியின் துணை கேப்டனாக இருப்பார்.
தற்போது நடந்து முடிந்த தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான தொடரில் ஷுப்மன் கில் சொதப்பினார். அதேபோல, இந்த 2025ஆம் ஆண்டு முழுவதுமே அவர் சிறப்பாக விளையாடவில்லை. அவர் அணியில் சேர்க்கப்பாடதற்கு காயம் போன்ற காரணங்கள் கூறப்பட்டாலும் அவருடைய மோசமான ஃபார்ம் தான் முக்கிய காரணம்.
ஆனால் அவர் இந்திய டெஸ்ட் அணிக்கும், ஒருநாள் அணிக்கும் கேப்டனாக இருப்பத்தால் அவர் இந்திய அணியின் தவிர்க்க முடியாத நட்சத்திர வீரராக இருக்கிறார். சச்சின், கோலி வரிசையில் ஷுப்மன் கில்லும் பெரிய ஜாம்பவனாக வருவார் என்ற எதிர்பார்ப்பு அதிகமாக இருக்கிறது. விரைவில் அவர் ஃபார்முக்கு திரும்புவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணி:
சூர்யகுமார் யாதவ் (கேப்டன்), அபிஷேக் ஷர்மா, சஞ்சு சாம்சன், திலக் வர்மா, ஹர்திக் பாண்டியா, ஷிவம் துபே, அக்சர் படேல் (துணை கேப்டன்), ரிங்கு சிங், குல்தீப் யாதவ், வருண் சக்கரவர்த்தி, ஜஸ்பிரித் பும்ரா, அர்ஷ்தீப் சிங், ஹர்ஷித் ராணா, வாஷிங்டன் சுந்தர், இஷான் கிஷன்.
