ஒசூரில் அதிர்ச்சி : சிறுவன் கடத்தி கொலை!

Published On:

| By Kavi

ஓசூர் அருகே 13 வயது சிறுவன் கடத்திக் கொல்லப்பட்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.Shocking incident in Hosur

கிருஷ்ணகிரி மாவட்டம் அஞ்செட்டி அருகே மாவநட்டி பகுதியைச் சேர்ந்தவர் சிவராஜ். இவரது மனைவி மஞ்சு. 

இவர்களது இரண்டாவது மகன் ரோகித் (13), அந்தப் பகுதியில் உள்ள பள்ளியில் எட்டாம் வகுப்பு படித்து வந்தார். 

இந்த நிலையில் நேற்று உடல்நிலை சரியில்லை என பள்ளிக்குப் போகவில்லை என்று கூறப்படுகிறது. 

நேற்று மாலை கிரிக்கெட் விளையாடுவதற்காக நண்பர்களுடன் சென்றுள்ளார். 

இதையடுத்து நீண்ட நேரம் ஆகியும் சிறுவன் ரோஹித் வீட்டுக்கு வராததால், அவனது பெற்றோர் அஞ்செட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். 

ஆனால் நேற்று இரவு புகார் அளித்தும் இன்று காலை வரை சிறுவனை கண்டுபிடித்து தரவில்லை என்று ரோஹித்தின் உறவினர்கள் அஞ்செட்டி பகுதியில் சாலை மறியலில் ஈடுபட்டனர். 

இந்த சூழலில் போலீசார் அந்த பகுதியில் இருந்த சிசிடிவி காட்சியை ஆய்வு செய்தபோது ரோஹித்தை சிலர் காரில் கடத்தி சென்றது பதிவாகியிருந்தது. 

இதையடுத்து சிசிடிவியில் அடையாளம் காணப்பட்ட இரு இளைஞர்களை போலீசார் பிடித்து விசாரித்த போது அவர்கள் ரோஹித்தை கொலை செய்து தேன்கனிக்கோட்டை சாலையில் உள்ள திருமொடுக்கு கீழ்பள்ளம் பகுதியில் வீசியதாக கூறியிருக்கின்றனர்.

தொடர்ந்து போலீசார் அந்த வனப்பகுதிக்கு சென்றபோது அங்கு காலில் வெட்டு காயங்கள் மற்றும் வயிற்றில் குத்தப்பட்டு சிறுவன் ரோஹித் கொலை செய்யப்பட்டு கிடந்தார். 

இதையடுத்து சிறுவனின் உடலை மீட்டு போலீசார் பிரேதப் பரிசோதனைக்கு கொண்டு செல்ல முயன்றனர். ஆனால் உறவினர்கள் உடலை கொடுக்க மறுத்து, கொலையாளிகளை கைது செய்ய வேண்டும். போலீஸ் உடனடியாக விசாரித்து இருந்தால் இந்த கொலை நடந்திருக்காது என்று கண்டித்து சாலை மறியலில் ஈடுபட்டனர். 

இதன் காரணமாக அந்தப் பகுதியில் பதற்றமான சூழ்நிலை நிலவுவதால் ஓசூர் ஏஎஸ்பி அக்ஷய் அணில் வாகரே தலைமையில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். 

மாணவனை கடத்திய கார் அந்த பகுதியில் உள்ள ஒரு பெட்ரோல் பங்கில் இருந்து பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. 

இந்த நிலையில் மாணவரை கொலை செய்ததற்கான காரணம் குறித்து கைதாகி உள்ள இரு இளைஞர்களிடம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.  Shocking incident in Hosur

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share