கொலைகார பசங்க.. ரூ.3 கோடி இன்சூரன்ஸ் பணத்துக்காக பாம்பை ஏவிவிட்டு அப்பாவை கொலை செய்த கொடூரம்!

Published On:

| By Mathi

Crime Thiruvallur

ரூ.3 கோடி இன்சூரன்ஸ் பணத்துக்காக பெற்ற தந்தையை பாம்பை ஏவி கொலை செய்த 2 மகன்கள் உட்பட 6 பேர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருவள்ளூர் மாவட்டம் பொதட்டூர்பேட்டையைச் சேர்ந்த அரசுப் பள்ளி ஆய்வக உதவியாளர் இ.பி. கணேசன் (56). தமது வீட்டில் கடந்த அக்டோபர் 22-ந் தேதி கணேசன் உயிரிழந்த நிலையில் சடலமாக கண்டெடுக்கப்பட்டார். அவரது மரணம் பாம்பு கடியால் நிகழ்ந்ததாக குடும்பத்தினர் தெரிவித்தனர்.

ADVERTISEMENT

இந்த நிலையில் கணேசனின் பெயரில் ரூ.3 கோடி மதிப்பிலான இன்சூரன்ஸ் பணத்துக்கு மகன்கள் போட்டி போட்டு உரிமை கோரிய போது சந்தேகம் ஏற்பட்டதால் அந்நிறுவனங்கள் போலீசில் புகார் கொடுத்தன.

இது தொடர்பாக போலீசார் நடத்திய விசாரணையில், கணேசனின் மகன்களான மோகன்ராஜ் (26) மற்றும் ஹரிஹரன் (27) ஆகியோர் பெற்ற தந்தையை பாம்பை ஏவிவிட்டு கொலை செய்த கொடூரமும் வெளிச்சத்துக்கு வந்தது. பாம்பு கடித்த பிறகு உடனடியாக மருத்துவ சிகிச்சை அளிக்காமல் கணேசனை துடி துடிக்க மகன்கள் சாகவிட்டுள்ளனர்.

ADVERTISEMENT

இதனையடுத்து மோகன்ராஜ், ஹரிஹரன் ஆகியோருடன் கூட்டாளிகள் பாலாஜி (28), பிரசாந்த் (35), தினகரன் (28), நவீன்குமார் (28) ஆகியோரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இன்சூரன்ஸ் விதிகள் சொல்வது என்ன?

ADVERTISEMENT

பொதுவாக இன்சூரன்ஸ்- காப்பீடு என்பது விபத்து அல்லது இயற்கை மரணங்களுக்காக வழங்கப்படுகிறது. இன்சூரன்ஸ் பாலிசி எடுத்துவிட்டு 1 ஆண்டுக்குள் தற்கொலை செய்தாலோ அல்லது பாலிசிதாரரை கொலை செய்துவிட்டு பணத்துக்கு உரிமை கோரினாலோ மோசடிகளில் ஒன்றாகும்.

இன்சூரன்ஸ் விதிகளின்படி, பாலிசிதாரரின் மரணத்தில் சந்தேகம் இருந்தாலோ அல்லது பாலிசிதாரரின் பணத்தைப் பெறுபவருக்கு கொலையில் தொடர்பு இருந்தாலோ அந்தப் பாலிசி செல்லாததாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share