துபாய், இத்தாலி, பெல்ஜியம் நாடுகளில் நடந்த கார் பந்தயங்களில் மூன்றாவது மற்றும் இரண்டாவது இடத்தைப் பிடித்தது அஜித்குமார் ரேஸிங் அணி. தற்போது ஸ்பெயின் நாட்டின் பார்சிலோனாவில் நடந்த போட்டியிலும் இது மூன்றாம் இடம் பிடித்திருக்கிறது.
இந்த போட்டியின் இடையே ‘இந்தியா டுடே’ இணையதளத்திற்கு அஜித்குமார் பேட்டி அளித்தார். அதில் தனது திரையுலக வாழ்க்கை வெற்றிகள் மற்றும் கார் ரேஸ் ஆர்வத்தின் முதுகெலும்பாக மனைவி ஷாலினி திகழ்வதாகப் பேசியுள்ளார்.
“ஷாலினியோட ஆதரவு இல்லேன்னா இது எதுவுமே சாத்தியம் ஆகியிருக்காது. அவங்க பண்ண எல்லாத்தையும் என்னால பண்ண முடியுமான்னு தெரியலை. நான் வீட்டில் இல்லாதபோது குழந்தைகளை அவங்கதான் பார்த்துக்கறாங்க. சில தியாகங்களை எனக்காக அவங்க பண்றாங்க.
என்னை குழந்தைகள் எந்தளவுக்கு மிஸ் பண்றாங்களோ, அதே அளவுக்கு நானும் அவங்களை மிஸ் பண்றேன். உங்களுக்கு ரொம்ப பிடிச்ச விஷயத்தை பண்றப்போ, இது போன்ற தியாகங்களை தவிர்க்க முடியாது” என்று சொன்ன அஜித், 2002ஆம் ஆண்டு திருமணம் முடிந்த காலகட்டத்தில் தான் ரேஸில் கலந்துகொள்வதாகச் சொன்னபோதும் மனைவி ஆதரவாக இருந்ததாகக் குறிப்பிட்டிருக்கிறார்.
”அப்போ இருந்து இப்போ வரைக்கும் என்னோட ரேஸிங் ஆர்வத்துக்கு அவங்க ஆதரவாக இருக்காங்க. இப்போ மகனுக்கும் இதுல ஆர்வம் வந்திருக்குது. உண்மையிலேயே இது ஆர்வம் இருக்குதுன்னா தெரிஞ்சு முடிவெடுக்க அவகாசம் தந்திருக்கேன். நடிப்பு, ரேஸ் உட்பட எதுவானாலும் என்னோட எண்ணங்களை குழந்தைகள் மேல திணிக்க நான் விரும்பமாட்டேன். அவங்களா முடிவெடுத்து எது பண்ணாலும், அதுக்கு நான் ஆதரவாக நிற்பேன்” என்று அந்த பேட்டியில் அஜித் தெரிவித்திருக்கிறார்.
இதே பேட்டியைச் சென்னைக்கு வர்றப்போ தமிழ்லயும் கொடுத்தா நல்லாயிருக்கும்..!