ஹேமா கமிட்டி அறிக்கை: குஷ்பூ, ராதிகா, குட்டி பத்மினி சொல்லும் அதிர்ச்சி தகவல்கள்!

Published On:

| By Kumaresan M

மலையாள திரையுலகில் நடக்கும்  பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் குறித்து ஹேமா அறிக்கை வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மலையாள, தமிழ் நடிகைகள் பாலியல் தொல்லைக்கு ஆளாவதாக தகவல் வெளியாகி பரபரப்பு ஏற்பட்டுள்ளது. நடிகை ஸ்ரீரெட்டி நடிகர் சங்க செயலாளர் விஷால் மீதே பாலியல் வன்கொடுமை புகார் முன் வைத்துள்ளார். இதற்கிடையே,  நடிகை குட்டி பத்மினி ஆங்கில ஊடகத்துக்கு அளித்துள்ள பேட்டியில் சிறு வயதில் இருந்தே நான் பாலியல் வன்கொடுமையை சந்தித்துள்ளேன். பாலியல் தொல்லை காரணமாக சினிமா, சீரியல் நடிகைகள் தற்கொலை முடிவுக்கு தள்ளப்படுவதாகவும் அவர் கூறியுள்ளார்.

நடிகை குஷ்பூ தனது எக்ஸ் பக்கத்தில் ஹேமா அறிக்கைக்கு பாராட்டு தெரிவித்துள்ளார்.  இந்த அறிக்கை முக்கியமானது. அது நல்ல பின்விளைவுகளை ஏற்படுத்தியுள்ளது. பாதிக்கப்பட்டவர்கள் நமக்கு அன்னியர்களாக இருந்தாலும், நமது ஆதரவு அவர்களுக்கு தேவை. ஹேமா அறிக்கை மலையாளம் மட்டுமல்லாமல் அனைத்து திரைத்துறையிலும் நல்ல மாற்றத்தை ஏற்படுத்தும். இன்றோ, நாளையோ நல்ல விஷயங்கள் நடக்கும். பாதிப்புக்குள்ளான பெண்கள் எந்த வகையிலும் சமரசத்துக்கு  போகக் கூடாது என்று தெரிவித்துள்ளார்.

குஷ்பூ சிறுவயதாக இருந்த போது, தனது  தந்தையால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாக சில காலத்துக்கு முன் கூறியிருந்தார். என் தந்தையின் துஷ்பிரயோகம் பற்றி பேச இத்தனை காலம்  எடுத்தது ஏன் என்று சிலர் என்னிடம் கேட்கிறார்கள். இது குறித்து நான் முன்பே பேசியிருக்க வேண்டும் என்பதை ஒப்புக்கொள்கிறேன் என்றும் தெரிவித்துள்ளார்.

நடிகை ராதிகா, 46 வருடங்களாக நான் இந்த துறையில் உள்ளேன். பொதுவாகவே, அனைத்து பணியிடங்களிலும் பெண்களுக்கு பாலியல் வன்கொடுமை நடப்பதாக தெரிவித்துள்ளார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்…. 

எம்.குமரேசன்

பங்குச் சந்தையில் புதிய உச்சம் : இன்று கவனம் செலுத்தும் நிறுவனங்கள்!

எத்தனை கோடி கொடுத்தா என்ன? பான்மசாலா விளம்பரம் வேண்டாம் : நடிகர் மாதவன் முடிவின் பின்னணி!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share