சென்னையில் சிறுமி ஒருவருக்கு பாலியல் தொல்லை கொடுத்த புகாரில், அகில இந்திய இந்து மகாசபா தலைவர் கோடம்பாக்கம் ஸ்ரீ என்ற கந்தன், ‘போக்சோ’ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார்.
சிறுமி ஒருவர் கொடுத்த புகாரின் அடிப்படையில் கோடம்பாக்கம் ஶ்ரீ மீது சென்னை தியாகராயர் நகர் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
இதில், பெற்றோரை இழந்து அத்தையுடன் வசித்து வந்த 13 வயதான அந்த சிறுமிக்கு கோடம்பாக்கம் ஶ்ரீ பாலியல் தொல்லை கொடுத்தது தெரிய வந்தது.
இந்த விசாரணையைத் தொடர்ந்து கோடம்பாக்கம் ஶ்ரீ, போக்சோ சட்டத்தின் கீழ் தியாகராயர் நகர் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
சில ஆண்டுகளுக்கு முன்னர் தமது இயக்கத்தின் பொதுச்செயலாளராக இருந்த பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாகவும் கோடம்பாக்கம் ஶ்ரீ சர்ச்சையில் சிக்கியது குறிப்பிடத்தக்கது.