தமிழக வெற்றிக் கழக கூட்டணியில் ஓபிஎஸ், டிடிவி தினகரன் ஆகியோர் பொங்கலுக்கு முன்னதாக இணைவார்கள் என அக்கட்சியின் நிர்வாக குழு தலைமை ஒருங்கிணைப்பாளர் கே.ஏ.செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
பெருந்துறையில் இன்று (டிசம்பர் 28) செய்தியாளர்களிடம் கே.ஏ.செங்கோட்டையன் கூறியதாவது: அதிமுகவின் மூத்த தலைவர்கள், முன்னாள் அமைச்சர்கள் பலபேர் பொங்கலுக்கு முன்னரே தவெகவில் இணைய இருக்கின்றனர்.
எங்களைப் பற்றி ஒவ்வொரு இயக்கம், கட்சியின் தலைவர்கள் ஒவ்வொரு கருத்தை சொல்கின்றனர். தவெக, மதம் மற்றும் மொழிகளுக்கு அப்பாற்பட்ட இயக்கம். நமது பயணம் ஏழை, எளிய மக்களை வாழ வைப்பது, சமநிலையை சமத்துவத்தை உருவாக்குவது என்பதை நோக்கித்தான் இருக்கிறது.
தவெக கூட்டணியில் ஓபிஎஸ், டிடிவி தினகரன் இணைவது பொங்கலுக்கு முன்னரே நடைபெறும். இவ்வாறு செங்கோட்டையன் தெரிவித்தார்.
