கலால் வரி 5 மடங்கு உயர்வு: 1 சிகரெட் விலை ரூ18-ல் இருந்து ரூ.72 ஆக உயரும்

Published On:

| By Mathi

Cigarette

மத்திய அரசின் கலால் வரி உயர்வால் புகையிலை பொருட்களின் விலை மிகக் கடுமையாக உயரக் கூடும்.

நாடாளுமன்றத்தில், புகையிலை பொருட்களுக்கு கூடுதல் வரி விதிக்கும் சட்ட திருத்த மசோதா நிறைவேற்றப்பட்டது. இம்மசோதாவுக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு ஒப்புதல் அளித்த நிலையில் புதிய சட்டம் அமலுக்கு வருகிறது.

ADVERTISEMENT

இப்புதிய சட்டத்தின் மூலம்

  • மெல்லும் புகையிலைக்கான வரி 25%-ல் இருந்து 100% உயர்த்தப்பட்டுள்ளது
  • ஹூக்கா புகையிலைக்கான வரி 25%-ல் இருந்து 40% ஆக உயருகிறது.
  • இப்புதிய வரி உயர்வால் 1 சிகரெட் விலை 3 முதல் 4 மடங்கு அதிகமாகும்.
  • 1 சிகரெட் விலை ரூ18-க்கு விற்பனை செய்யப்படுவது இனி 1 சிகரெட் விலை ரூ.72-க்கு விற்பனை செய்யப்படும்.
  • இதனால் நாட்டில் புகைபிடிக்கும் பழக்கம் பெருமளவு குறையக் கூடிய சாத்தியம் ஏற்பட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share