அதிமுக மூத்த தலைவர்களில் ஒருவரான கே.ஏ செங்கோட்டையன் செப்டம்பர் 5ம் தேதி மனம் திறக்க உள்ளதாக அறிவித்து கடந்த 3 நாட்களாக தனது ஆதரவாளகர்களுடன் ஆலோசனையில் ஈடுபட்டு வந்தார்.
தொடர்ச்சியாக எடப்பாடி பழனிசாமி தலைமை மீது அதிருப்தியில் இருந்த செங்கோட்டையன் அதிமுக நிகழ்ச்சிகளை புறக்கணித்து அமைதி காத்து வந்த நிலையில் அவரது அறிவிப்பு தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இந்நிலையில் இன்று காலை முதல் அவரது இல்லத்தில் அதிமுக தொண்டர்கள் குவியத் தொடங்கினர். இந்நிலையில் இன்று காலை ஆயிரக்கணக்கான தொண்டர்கள் புடை சூழ திறந்த வாகனத்தில் ரோடு ஷோ நடத்தி கோபிசெட்டி பாளையம் கட்சி அலுவகலத்திற்கு வந்துள்ளார். செங்கோட்டையன் இன்று கலை 10 மணியளவில் செய்தியாளர்களை சந்தித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.