குற்றாலம் செல்கிறீர்களா? மாற்றுப் பாதையில் செங்கோட்டை- மயிலாடுதுறை எக்ஸ்பிரஸ் ரயில்!

Published On:

| By Minnambalam Desk

Train Service

செங்கோட்டை- மயிலாடுதுறை இடையே இயக்கப்படும் வண்டி எண் 16848 எக்ஸ்பிரஸ் ரயில் குறிப்பிட்ட நாட்களில் மாற்றுப் பாதையில் இயக்கப்படும் என மதுரை கோட்ட ரயில்வே தெரிவித்துள்ளது. Sengottai–Mayiladuthurai Express Train

குற்றாலம் செல்லும் சுற்றுலா பயணிகள் செங்கோட்டை- மயிலாடுதுறை எக்ஸ்பிரஸ் ரயிலில் அதிகம் பயணிக்கின்றனர். தற்போது ரயில்வே தண்டவாள பராமரிப்பு பணிகள் காரணமாக, இந்த எக்ஸ்பிரஸ் ரயில் மாற்றுப் பாதையில் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஜூலை 1, ஜூலை 2, ஜூலை 4, ஜூலை 5, ஜூலை 7, ஜூலை 8, ஜூலை 9, ஜூலை 11, ஜூலை 12, ஜூலை14, ஜூலை 15, ஜூலை 16 மற்றும் ஜூலை 30 ஆகிய நாட்களில்,

செங்கோட்டையில் இருந்து புறப்படும் 16848 எக்ஸ்பிரஸ் ரயில், விருதுநகர்- மானாமதுரை- காரைக்குடி- திருச்சி வழியாக மயிலாடுதுறை செல்லும்.

16848 எக்ஸ்பிரஸ் ரயில் வழக்கமாக நின்று செல்லக் கூடிய கள்ளிக்குடி, திருமங்கலம், திருப்பரங்குன்றம், மதுரை சந்திப்பு, கொடைக்கானல் சாலை, திண்டுக்கல், வடமதுரை, வையம்பட்டி, மணப்பாறை ஆகிய ரயில் நிலையங்கள் வழியாக மேற்குறிப்பிட்ட நாட்களில் இயக்கப்படாது.

அதே நேரத்தில், அருப்புக்கோட்டை-மானாமதுரை- சிவகங்கை- காரைக்குடி- புதுக்கோட்டை- திருச்சிராப்பள்ளி ரயில் நிலையங்களில் நின்று செல்லும்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share