தாய்ப்பால் விழிப்புணர்வு… புதிய தாய்மார்களுக்கு உதவி எண்!

Published On:

| By Minnambalam Login1

seethapathy hospital helpline

உலக தாய்ப்பால் வாரத்தை முன்னிட்டு சென்னை மயிலாப்பூரில் உள்ள சீதாபதி மருத்துவமனை புதிய தாய்மார்களுக்கு இலவச உதவி எண்ணை நேற்று(ஆகஸ்ட் 4) வெளியிட்டது.

“இந்த உதவி எண் 7305644465 வாரம் முழுக்க 24 மணி நேரமும் செயல்படும். புதிய தாய்மார்களுக்குச் சரியான தகவல்களும், பாலூட்டுதல் துறையில் உள்ள அனுபவமிக்க ஆலோசகர்களுடன் உரையாட இந்த எண் உதவும்” என்று சீதாபதி மருத்துவமனை அறிவித்துள்ளது. spital helpline

இது குறித்துப் பேசிய சீதாபதி மருத்துவமனை இயக்குநரும், மக்கப்பெறு மருத்துவருமான உமா ராம் “ பாலூட்டுதல் வகுப்புகள் மூலம், நாங்கள் குழந்தை பிறந்த முதல் ஒரு மணி நேரத்தில்  தாய்க்கும் சேய்க்கும் இடையே  85%  தோலிலிருந்து தோலுக்கும், 60% குழந்தைக்கும் தாயின் மார்புக்கும் ஆன தொடர்பை ஏற்படுத்தியுள்ளோம் மற்றும் முதல் 6 மாதத்தில் 70% சதவீத குழந்தைகளுக்குத் தாய்ப்பால் மூலமாக மட்டும் ஊட்டச்சத்து கிடைக்கச் செய்துள்ளோம்” என்று சொன்னார்.

உலக தாய்ப்பால் வாரம் 1992 முதல் கொண்டாடப்பட்டு வருகிறது. அப்பொழுது இருந்து இது ஒவ்வொரு வருடமும் ஆகஸ்ட் 1 முதல் 7-ஆம் தேதி வரை, உலக சுகாதார அமைப்பு மற்றும் யூனிசெஃப் ஆதரவுடன் கொண்டாடப்படுகிறது.

இதன் நோக்கம், பிறந்த குழந்தைகளுக்கு முதல் 6 மாதத்திற்கு தாய்ப்பால் மூலமாக மட்டுமே ஊட்டச்சத்து கிடைக்க செய்வதாகும்.

அப்துல் ரஹ்மான்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்…. 

’கொட்டுக்காளி’ ரிலீஸில் சிக்கலா? – சூரி சொன்ன மெசேஜ்

ஒருநாள் கிரிக்கெட்டில் ‘ரோகித் சர்மா’ புதிய சாதனை!

உதயநிதிக்கு துணை முதல்வர் பதவியா? – ஸ்டாலின் பதில்!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share