நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், சுற்றுச்சூழல் சார்ந்த தொடர் மாநாடுகளில் ஒன்றாக, ‘தண்ணீரின் மாநாடு’ நடத்தத் திட்டமிட்டுள்ளதாக அறிவித்துள்ளார்.
2026 சட்டமன்றத் தேர்தலுக்காக தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு கட்சியினரும் தீவிர பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகின்றனர்.
எனினும் நாம் தமிழர் கட்சி மற்ற கட்சிகளை போல் இல்லாமல், ஏற்கனவே கால்நடைகளின் மாநாடு, மரங்களின் மாநாடு, மலைகளின் மாநாடு மற்றும் கடலின் மாநாடு போன்றவற்றை அறிவித்துள்ளது.
இந்த நிலையில் தான் அடுத்து தண்ணீர் மாநாட்டை நடத்தத் திட்டமிட்டுள்ளதாக அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் நிலவும் தண்ணீர் பற்றாக்குறை, காவிரி நதிநீர்ச் சிக்கல், நன்னீர் பாதுகாப்பு மற்றும் நீர்வளப் பிரச்சினைகள் குறித்து விவாதித்து, விழிப்புணர்வை ஏற்படுத்துவதே இம்மாநாட்டின் நோக்கம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தஞ்சாவூரில் வரும் நவம்பர் 15ம் தேதி திருவையாறு தொகுதியில் கல்லணை அருகே உள்ள பூதலூர் இந்த மாநாடு நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
