பாமக நிறுவனர் ராமதாஸை சசிகலா சந்தித்து பேசி வருகிறார்.
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணி, என்.டி.ஏ.கூட்டணி, நாதக, தவெக என நான்குமுனை போட்டி நிலவி வந்த நிலையில், மற்றொரு கூட்டணி தொடர்பான அறிவிப்பு நாளை வெளியாக இருக்கிறது என்று நமது மின்னம்பலத்தில் நேற்று செய்தி வெளியிட்டிருந்தோம்.
அதில் ராமதாஸும், சசிகலாவும் புதிய கூட்டணியை அமைக்க இருக்கிறார்கள் என்று கூறியிருந்தோம்.
இந்தசூழலில் தைலாபுரம் இல்லத்துக்கு வந்த சசிகலா, பாமக நிறுவனர் ராமதாஸை சந்தித்து பேசி வருகிறார்.
இந்த சந்திப்பை தொடர்ந்து கூட்டணி அறிவிப்பை இருவரும் வெளியிடுவார்கள் என்று தகவல்கள் வருகின்றன.
ராமதாஸின் பாமகவுடன் அஇபுதமமுக கட்சி கூட்டணி வைக்கவுள்ளது.
