கிஷோர் குடும்பத்திற்கு ரூ.1 லட்சம் வழங்கிய சரத்குமார்

Published On:

| By Balaji

‘ஆடுகளம்’ படத்தொகுப்புக்காக தேசிய விருதுபெற்ற பிரபல படத்தொகுப்பாளர் கிஷோர், அண்மையில் உடல்நலக் குறைவால் உயிரிழந்தார்.

இந்நிலையில், வெற்றிமாறன் இயக்கத்தில் வெளியான ‘விசாரணை’ படத்துக்காக இந்த ஆண்டு கிஷோருக்கு தேசிய விருது அறிவிக்கப்பட்டது. இதற்கு, மகனை இழந்து வாடும் அவரது தந்தை தியாகராஜன், விருதில் மகிழ்ச்சி இல்லை. மகன் கிஷோர் இறந்தபின் வறுமையில் வாழ்ந்துவவருதாகக் கவலை தெரிவித்தார். இந்தச் செய்தி ஊடகங்களில் வெளியானதைக் கேள்விப்பட்ட சமத்துவ மக்கள் கட்சித் தலைவரும், திரைப்பட நடிகருமான சரத்குமார், கிஷோர் குடும்பத்தினருக்கு ரூ.1 லட்சம் உதவியாக வழங்கினார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share