விஜய் தொலைக்காட்சியில் சூப்பர் சிங்கர் சீனியர் நிகழ்ச்சி வாரந்தோறும் ஒளிபரப்பாகி வருகிறது. அதில் பல்வேறு போட்டியாளர்கள் பங்கேற்றுள்ள நிலையில், இளையராஜா போலவே தனது வசீகரிக்கும் கிராமத்து குரலில் பாடி பலரையும் கிறங்கடித்து வருபவர் வருபவர் சரண் ராஜா.
அந்த நிகழ்ச்சியில் அம்மா ஸ்பெஷல் பிரிவில், அரண்மனை கிளி படத்தில் இடம்பெற்ற ’என் தாயெனும் கோயிலை காக்க மறந்திட்ட பாவியடி கிளியே’ பாடலை பலரையும் கண்கலங்க வைத்துள்ளார்.
அதன்பின்னர் ’உன்னுடைய பெரிய ஆசை என்ன’ தொகுப்பாளர் கேள்வி எழுப்ப, சரண் தனது தந்தையின் ஆசையையும், அவர் செய்த சாதனையை கூற அரங்கமே இன்ப அதிர்ச்சியில் உறைந்தது.
அவர் பேசுகையில், “பாட்டுல நான் அதிக நேரம் கவனம் செலுத்தியதை விட, படிப்பில் தான் அதிகம் கவனம் செலுத்தினேன். என் அப்பா, அப்பா கஷ்டப்பட்டாலும், என் சித்தப்பாவின் முயற்சி இல்லையென்றால் இந்த இடத்திற்கு வந்திருக்க மாட்டேன். கடைசி துளி உயிர் உள்ளவரை சித்தப்பா பிரகாச குமாரை மறக்க மாட்டேன்.
நிறைய புத்தகம் படிப்பேன். என் மனநிலையை யாரிடமும் பகிர்ந்து கொள்ள மாட்டேன். மகிழ்ச்சியாக இருந்தாலும், கவலையாக இருந்தாலும் புத்தகம் தான் படிப்பேன். எங்க அப்பா ஆசைக்காக தான் படித்தேன்.
அதன் விளைவாக நான் எழுதிய ஒரு கவிதை தொகுப்பு உலக சாதனை செய்தது. கிட்டத்தட்ட ஒரு 12 விருதுகள் வாங்கியுள்ளேன்.
நான் பேராசிரியர் ஆகி, அதில் கிடைக்கும் சம்பளத்தை என் அப்பாவிடம் கொடுக்க ஆசைப்படுகிறேன்” என கூற அங்கிருந்த போட்டியாளர்கள், நடுவர்கள், பார்வையாளர்கள் என அனைவரும் கண்கலங்க கைத்தட்டி பாராட்டு தெரிவித்தனர்.