‘என்னை அறிந்தால்’ இந்தி ரீமேக்கில் நடிக்கும் பிரபல பாலிவுட் நடிகர்!

Published On:

| By Monisha

salman khan in yennai arindhaal hindi remake

கடந்த 2015 ஆம் ஆண்டு வெளியான ‘என்னை அறிந்தால்’ படத்தின் இந்தி ரீமேக்கில் பிரபல பாலிவுட் நடிகர் சல்மான் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் நடிகர் அஜித்குமார் நடிப்பில் கடந்த 2015 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் என்னை அறிந்தால். இந்த திரைப்படத்தில் நடிகர் அஜித்திற்கு ஜோடியாக அனுஷ்கா ஷெட்டி, திரிஷா ஆகியோர் நடித்திருந்தனர்.

இதில் அருண் விஜய், அனிகா, பார்வதி நாயர், விவேக், உள்ளிட்ட பிரபலங்கள் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்திருந்தார்கள். இந்த படத்தில் அருண் விஜய்யின் வில்லத்தனமான கதாபாத்திரம் மற்றும் அவரது நடிப்பு வெகுஜன ரசிகர்களால் பாராட்டப்பட்டது.

ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்திருந்த இப்படம் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் பெரும் வரவேற்பை பெற்றது. படம் வெளியாகி 8 ஆண்டுகள் கடந்த பின் இந்தியில் ’என்னை அறிந்தால்’ படம் சல்மான்கான் நடிப்பில் ரீமேக் ஆகவுள்ளது.

இந்த படத்தில் சில மாற்றங்களை இயக்குநர் கவுதம் வாசுதேவ் மேனன் செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது. விரைவில் இந்த படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

இராமானுஜம்

தீபாவளிக்கு ஊருக்கு போறீங்களா?… ஆம்னி பேருந்துகள் ரூட் மாற்றம்!

அதிமுக கொடி, சின்னம் பயன்படுத்த தடை: பன்னீர் மேல்முறையீடு!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share