விளையாட்டு வீரர்களுக்கு ‘ஸ்போர்ட்ஸ் அத்தாரிட்டி’யில் வேலை… 323 காலியிடங்கள்! சம்பளம் எவ்வளவு தெரியுமா?

Published On:

| By Santhosh Raj Saravanan

sai assistant coach recruitment 2026 sports jobs salary details

“விளையாட்டுல ஜெயிச்சோம், மெடல் வாங்கினோம்னு மட்டும் இல்லாம… அது மூலமா ஒரு சூப்பர் வேலையும் வாங்கணுமா?” இதோ இந்திய விளையாட்டு ஆணையம் (Sports Authority of India – SAI) உங்களுக்காகவே ஒரு செம அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

மத்திய அரசின் கீழ் செயல்படும் இந்த அமைப்பில், ஒப்பந்த அடிப்படையில் ‘உதவிப் பயிற்சியாளர்’ (Assistant Coach) பணியிடங்களை நிரப்பத் தற்போது அதிகாரப்பூர்வ அறிவிப்பு வந்துள்ளது. மொத்தம் 323 இடங்கள் காலியாக உள்ளன.

ADVERTISEMENT

எந்தெந்த விளையாட்டுகளுக்கு வாய்ப்பு? வில்வித்தை (Archery), தடகளம் (Athletics), கூடைப்பந்து, குத்துச்சண்டை, கால்பந்து, ஹாக்கி, கபடி, நீச்சல் என மொத்தம் 22 வகையான விளையாட்டுப் பிரிவுகளில் பயிற்சியாளர்கள் தேர்வு செய்யப்படவுள்ளனர். தமிழகத்தைச் சேர்ந்த விளையாட்டு வீரர்களுக்கு இது ஒரு பொன்னான வாய்ப்பு.

யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்?

ADVERTISEMENT
  • கல்வித் தகுதி: அங்கீகரிக்கப்பட்ட விளையாட்டுப் பயிற்சியில் டிப்ளமோ (Diploma in Coaching from SAI/NS NIS) முடித்திருக்க வேண்டும்.
  • அல்லது ஒலிம்பிக், உலகக் கோப்பைப் போட்டிகளில் பங்கேற்றவர்கள் அல்லது ஆசியப் போட்டிகளில் மெடல் வென்றவர்களும் நேரடியாக விண்ணப்பிக்கலாம். (துரோணாச்சார்யா விருது பெற்றவர்களுக்குத் தனி முன்னுரிமை உண்டு).
  • வயது வரம்பு: விண்ணப்பதாரர்கள் 21 முதல் 40 வயதுக்குள் இருக்க வேண்டும். (அரசு விதிகளின்படி வயதுத் தளர்வு உண்டு).

சம்பளம்: “இது ஒப்பந்த அடிப்படை வேலைதானேனு யோசிக்காதீங்க.”

தேர்வு செய்யப்படும் உதவிப் பயிற்சியாளர்களுக்கு மாதம் ரூ.50,719 முதல் ரூ.1,30,869 வரை (ஒருங்கிணைந்த ஊதியம்) சம்பளமாக வழங்கப்படும். விளையாட்டுத் துறையில் இவ்வளவு பெரிய சம்பளம் கிடைப்பது அரிது!

ADVERTISEMENT

தேர்வு முறை: விண்ணப்பதாரர்களின் விளையாட்டுச் சாதனைகள் மற்றும் நேர்காணல் (Interview) அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். எழுத்துத் தேர்வு எதுவும் கிடையாது.

விண்ணப்பிப்பது எப்படி? விருப்பமுள்ளவர்கள் sportsauthorityofindia.nic.in என்ற இணையதளத்தில் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.

கடைசி தேதி: ஜனவரி 30, 2026.

விளையாட்டுத் துறையில் சாதித்தவர்களுக்கு இது ஒரு கௌரவமான வேலை. குறிப்பா, கபடி, தடகளத்தில் கலக்கிய நம்ம ஊர் பசங்க, சும்மா சர்டிபிகேட்டை வீட்டுல பூட்டி வைக்காம, உடனே அப்ளை பண்ணுங்க. உங்க அனுபவம், அடுத்த தலைமுறை வீரர்களை உருவாக்கப் பயன்படட்டும். கடைசித் தேதிக்கு இன்னும் கொஞ்ச நாள்தான் இருக்கு… சீக்கிரம் முந்துங்கள்!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share