சபரிமலை ஐயப்பன் கோவிலில் தங்க திடுகள் திருடப்பட்ட வழக்கில் திருவிதாங்கூர் தேவசம் போர்டு முன்னாள் தலைவரான சிபிஎம் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான பத்மகுமார் கைது செய்யப்பட்டுள்ளார்.
சபரிமலை ஐயப்பன் கோவிலுக்குச் சொந்தமான ஆபரணங்களில் தங்க தகடுகள் திருடு போயின என்பது புகார். இது கேரளா அரசியலில் பெரும் சர்ச்சையாக உருவெடுத்தது.
ஐயப்பன் கோவிலின் கருவறை வாயிலில் துவாரபாலகர்கள் சிலைகள் உள்ளன. இந்த சிலைகளுக்கு கவசங்கள் அணிவிக்கப்பட்டிருந்தன. இதில் இருந்த தங்க தகடுகள்தான் திருடப்பட்டன.
2019-ல் துவாரபாலகர் சிலைகளை சீரமைக்கும் பணி சென்னையை சேர்ந்த நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டது. அப்போது துவாரபாலகர் சிலைகளில் இருந்து 4.5 கிலோ தங்க தகடுகள் மாயமானது தெரிய வந்தது. இது தொடர்பாக விசாரணை நடத்த கேரளா உயர்நீதிமன்றம் அண்மையில் உத்தரவிட்டிருந்தது.
இந்த வழக்கை விசாரிக்க சிறப்பு புலனாய்வுக் குழுவும் அமைக்கப்பட்டது. இந்த சர்ச்சையில் நடிகர் ஜெயராமின் பெயரும் அடிபட்டது. இது தொடர்பாக ஜெயராமனும் விளக்கம் அளித்திருந்தார்.
இந்த வழக்கில்
தேவசம் போர்டு முன்னாள் தலைவர்கள் பத்மகுமார் (சிபிஎம் கட்சி)
வாசு
உன்னிகிருஷ்ணன்
வாரியத்தின் அதிகாரிகள் உள்ளிட்டோர் சேர்க்கப்பட்டனர்.
தற்போது இந்த வழக்கில் தேவசம்போர்டு முன்னாள் தலைவர் பத்மகுமார் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார். இந்த வழக்கில் இதுவரை மொத்தம் 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
