நாமக்கல் அருகே வட்டாரப் போக்குவரத்து அலுவலர்- ஆர்டிஓ (RTO) சுப்பிரமணி மற்றும் ஆசிரியரான அவரது மனைவி பிரமிளா இருவரும் ரயில் முன்பு விழுந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. Suicide
திருச்சியில் ஆர்.டி.ஓ. ஆக பணிபுரிந்தவர் சுப்பிரமணி (வயது40). அவரது மனைவி பிரமிளா, ஆண்டாபுரம் ஊராட்சி தொடக்கப்பள்ளியில் ஆசிரியையாகப் பணிபுரிந்தார். சுப்பிரமணி மற்றும் பிரமிளா இருவரும் இன்று ஜூலை 6-ந் தேதி அதிகாலை நாமக்கல் அருகே வகுரம்பட்டி பகுதியில் ரயில் முன்பு விழுந்து தற்கொலை செய்து கொண்டனர்.
இருவரது உடல்களையும் கைப்பற்றி தற்கொலைக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். ரயில் முன் விழுந்து தற்கொலை செய்து கொண்ட சுப்பிரமணி- பிரமிளா தம்பதிக்கு ஒரு மகன், மகள் உள்ளனர்.