PM Kisan 22nd Installment Date 2026: மார்ச் 13 அன்று ரூ. 2,000 டெபாசிட்! பிஎம் கிசான் தவணை குறித்த முக்கிய அறிவிப்பு!

Published On:

| By Santhosh Raj Saravanan

Rs 2000 to be deposited in farmers accounts on march 13 under pm kisan

மத்திய அரசின் பிரதான் மந்திரி கிசான் சம்மான் நிதி (PM-Kisan) திட்டத்தின் கீழ் பயன்பெறும் கோடிக்கணக்கான விவசாயிகளுக்கு ஒரு நற்செய்தி கிடைத்துள்ளது. நாட்டின் விவசாயிகளின் வருமானத்தை உயர்த்துவதற்காக வழங்கப்படும் பிஎம் கிசான் 22வது தவணை ரூ. 2,000 வரும் மார்ச் 13, 2026 அன்று விவசாயிகளின் வங்கிக் கணக்குகளில் நேரடியாக டெபாசிட் செய்யப்பட உள்ளது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை மத்திய வேளாண் அமைச்சகம் தற்போது வெளியிட்டுள்ளது.

முக்கிய அம்சங்கள்: 22வது தவணை ரூ. 2,000 நிலவரம்

  • வெளியிடும் தேதி: மார்ச் 13, 2026.
  • யார் வெளியிடுவது? பிரதமர் நரேந்திர மோடி (Narendra Modi) (அசாம், குவஹாத்தி நிகழ்ச்சியில்).
  • பயனாளிகள்: நாடு முழுவதும் உள்ள 9 கோடிக்கும் அதிகமான தகுதியுள்ள விவசாயிகள்.
  • தவணைத் தொகை: ரபி பயிர் சாகுபடிக்குப் பிந்தைய உதவியாக ரூ. 2,000.

PM Kisan e-KYC Update: பணம் வர இதைப் பண்ணுங்க!

இந்த 22வது தவணை நிதியைப் பெறுவதற்கு விவசாயிகள் தங்களது e-KYC அப்டேட்டை முடித்திருக்க வேண்டியது கட்டாயமாகும்.

ADVERTISEMENT
  1. OTP அடிப்படையிலான e-KYC: பிஎம் கிசான் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் மொபைல் எண் மூலம் செய்யலாம்.
  2. பயோமெட்ரிக் e-KYC: அருகில் உள்ள CSC (பொதுச் சேவை மையங்கள்) மூலம் கைரேகை பதிவு செய்து சரிபார்க்கலாம்.

குறிப்பு: கடந்த 21வது தவணை நவம்பர் 19, 2025 அன்று தமிழ்நாட்டில் நடந்த விழாவில் வெளியிடப்பட்டது நினைவுகூரத்தக்கது.

பிஎம் கிசான் நிலையை (Status) சரிபார்ப்பது எப்படி?

விவசாயிகள் தங்களின் தவணைத் தொகை கணக்கில் சேருமா என்பதை அறிய PM-Kisan Official Website-க்குச் சென்று ‘Know Your Status’ பகுதியில் ஆதார் எண் அல்லது பதிவு எண்ணை உள்ளிட்டுச் சரிபார்க்கலாம்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share