நகைச்சுவை நடிகர் ரோபோ சங்கர் உடல் சென்னை வளசரவாக்கம் மயானத்தில் இன்று (செப்டம்பர் 19) தகனம் செய்யப்பட்டது.
நகைச்சுவை நடிகர் ரோபோ சங்கர், சின்னத்திரை மூலம் அறிமுகமானார். பின்னர் வெள்ளித்திரையிலும் நடிகர்கள் அஜித், தனுஷ் உள்ளிட்டோர் பங்களிலும் நடித்து புகழ் பெற்றவர். இவரது மகள் இந்திரஜா, விஜய்யின் கில்லி படத்தில் அழுத்தமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
ரோபோ சங்கர் நீண்டகாலமாக உடல்நலன் பாதிக்கப்பட்டிருந்தார். அண்மையில் உடல்நலம் தேறி மீண்டும் படங்களில் நடித்து வந்தார்.
இந்நிலையில் மீண்டும் உடல்நலம் குன்றியதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால் சிகிச்சை பலனின்றி ரோபோ சங்கர் உயிரிழந்தார்.
ரோபோ சங்கர் உடலுக்கு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், மநீம தலைவர் கமல்ஹாசன் எம்.பி. மற்றும் திரை உலகத்தினர் பெருந்திரளாக திரண்டு அஞ்சலி செலுத்தினர்.
ரோபோ சங்கர் உடலுக்கு அவரது ஸ்டண்ட் மாஸ்டர் ராமு, பணமாலை, மலர்கிரீடம் அணிவித்து இறுதி அஞ்சலி செலுத்தினார்.
மற்றொரு நடிகரான கூல்சுரேஷ், தரையில் உருண்டு புரண்டு சாமியாடியோல ஆடினார்; தாரை தப்பட்டை மேளத்துக்கு ஏற்ப திடீரென நடனம் ஆடியவர் ஒரு கட்டத்தில் பாம்பு டான்ஸ் ஆடினார்.
ரோபோ சங்கர் மனைவி பிரியங்கா, நடனமாடியபடியே அவரது கணவரை கண்ணீர் மல்க வழியனுப்பி வைத்த காட்சி நெஞ்சை உருக்குவதாக இருந்தது.