விஜய் பிரச்சார கூட்ட நெரிசலில் சிக்கி 30க்கும் அதிகமானோர் உயிரிழந்திருக்கும் நிலையில், பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல் கூறவும், உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு இரங்கல் தெரிவிக்கவும் முதல்வர் ஸ்டாலின் இன்று இரவே கரூர் விரைகிறார்.
கரூரில் விஜய் பிரச்சாரத்தில் கூட்ட நெரிசலில் சிக்கி 30க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். பலர் கவலைக்கிடமாக உள்ளனர்.
இந்தநிலையில் தலைமை செயலகத்துக்கு சென்று தலைமை செயலாளருடன் ஆலோசனை செய்த முதல்வர் ஸ்டாலின், இன்று இரவே தனி விமானம் மூலம் கரூர் விரைகிறார்.
இந்தசூழலில் உயிரிழந்த 36 பேரின் குடும்பத்தினருக்கும் தலா 10 லட்சம் ரூபாயும் தீவிர சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு 1 லட்சம் ரூபாயும் நிவாரணம் அறிவித்துள்ளார் முதல்வர்.
