விழுப்புரத்தில் பழுதடைந்த ஒரு அரிசி ஆலையில் இருந்து 158 மூட்டை ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. Ration rice sale in outside market
விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியை அடுத்த ஆர்.சி. மேல்கொந்தை பகுதியில் பழுதடைந்த ஒரு அரிசி ஆலை உள்ளது.இங்கு மூட்டை மூட்டையாக ரேஷன் அரிசி கடத்தி வைக்கப்பட்டிருப்பதாக மாவட்ட உணவு பொருள் வழங்கல் அதிகாரி சந்திரசேகருக்கு தகவல் கிடைத்துள்ளது.
இதைத்தொடர்ந்து அதிகாரிகள் அந்த அரிசி ஆலைக்கு சென்றனர். அங்கு அந்த ஆலை உரிமையாளரான நடராஜன் ரேஷன் அரிசி மூட்டைகளை பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது.
முதல் கட்ட விசாரணையில், சுற்று வட்டார பகுதிகளில் உள்ள ரேஷன் கடைகளில் குறைந்த விலையில் அரிசியை வாங்கி, அதை பாலிஷ் செய்து வெளி மார்க்கெட்டில் விற்பனை செய்து வந்தது தெரியவந்துள்ளது.
அந்த ஆலையிலிருந்து 158 மூட்டை ரேஷன் அரிசியை பறிமுதல் செய்த அதிகாரிகள் இது தொடர்பாக தீவிரமான முறையில் விசாரனை செய்து வருகின்றனர்.