இந்திய சினிமாவின் எனர்ஜி கிங் ரன்வீர் சிங் நடிப்பில், ஆதித்யா தார் இயக்கத்தில் வெளியான ‘துரந்தர்’ திரைப்படம் பாக்ஸ் ஆபீஸில் செய்த மேஜிக் நம்மில் பலருக்குத் தெரியும். உலகளவில் சுமார் ரூ. 1300 கோடிக்கும் மேல் வசூலை வாரிக்குவித்த இந்தப் படம், இந்திய ஸ்பை த்ரில்லர் வரிசையில் ஒரு புதிய மைல்கல்லை எட்டியது. சில நாடுகளில் தடை செய்யப்பட்ட போதிலும், ரசிகர்களின் ஏகோபித்த வரவேற்பைப் பெற்றது.
தற்போது இந்தப் படத்தின் இரண்டாம் பாகமான ‘துரந்தர்: த ரிவெஞ்ச்’ (Dhurandhar: The Revenge) குறித்த வெறித்தனமான அப்டேட் வெளியாகியுள்ளது.
டீசர் எப்போது?
ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் இப்படத்தின் டீசர், வரும் ஜனவரி 23-ஆம் தேதி வெளியாகிறது. சுமார் 1 நிமிடம் 48 விநாடிகள் ஓடக்கூடிய இந்த டீசர், முதலில் திரையரங்குகளில் பிரத்யேகமாகத் திரையிடப்பட்டு, அதன் பின்னரே யூடியூப் உள்ளிட்ட டிஜிட்டல் தளங்களில் வெளியாகும் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
யார் யாரெல்லாம் இருக்காங்க?
இந்த இரண்டாம் பாகத்தில் ரன்வீர் சிங்கிற்கு ஜோடியாக, ‘தெய்வத்திருமகள்’ படத்தில் குழந்தை நட்சத்திரமாக கலக்கிய சாரா அர்ஜுன் (Sara Arjun) நடித்துள்ளார். இது தவிர, மாதவன், சஞ்சய் தத், அக்சய் கன்னா மற்றும் அர்ஜுன் ராம்பால் என ஒரு மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே படத்தில் இணைந்துள்ளது.
கதை என்ன?
பாகிஸ்தானில் நடைபெற்ற ‘ஆபரேஷன் லியாரி’ மற்றும் இந்திய உளவுத்துறையான ‘ரா’ (RAW) மேற்கொண்ட ரகசிய நடவடிக்கைகளை மையமாக வைத்து இந்தப் படம் விறுவிறுப்பாக உருவாகியுள்ளது.
ரிலீஸ் எப்போ?
பான்-இந்தியா திரைப்படமாக உருவாகியுள்ள ‘துரந்தர் 2’, வரும் மார்ச் மாதம் திரையரங்குகளில் பிரம்மாண்டமாக வெளியாகவுள்ளது. ஜனவரி 23-ல் டீசர் வெளியாக உள்ளதால், ரன்வீர் ரசிகர்கள் இப்போதே சமூக வலைதளங்களை அதிரவிட்டு வருகின்றனர்!
