பாமக சமூக ஊடக பேரவை ஆலோசனை கூட்டம் திண்டிவனம் தைலாபுரம் தோட்டத்தில் பாமக நிறுவனர் ராமதாஸ் தலைமையில் இன்று (ஜூன் 29) நடைபெற்றது. ramadoss order his cadres attack
இந்த கூட்டத்தில் சமூக ஊடக பேரவை மாநில தலைவர் தொண்டி ஆனந்தன், சமூக ஊடக பேரவை மாநில ஒருங்கிணைப்பாளர் சோழன் குமார் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.
சோழன்குமார் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பாக பாமகவில் இருந்து விலகி பாஜகவில் இணைந்தார். பாஜகவில் அறிவுசார் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் பதவி அவருக்கு வழங்கப்பட்டது.

பாமக நிறுவனர் ராமதாஸ், தலைவர் அன்புமணி இடையே பிரச்சனை நீடித்து வரும் நிலையில், அன்புமணியால் ஓரம்கட்டப்பட்டவர்களை ராமதாஸ் அரவணைத்து வருகிறார்.
அந்தவகையில், சோழன் குமார் நேற்று (ஜூன் 28) தைலாபுரம் தோட்டத்திற்கு சென்று ராமதாஸை சந்தித்து மீண்டும் பாமகவில் இணைந்தார். உடனடியாக அவருக்கு சமூக ஊடக பேரவை மாநில ஒருங்கிணைப்பாளர் பதவியை ராமதாஸ் வழங்கினார்.
இன்று நடைபெற்ற சமூக ஊடக பேரவைக் கூட்டத்தில், அன்புமணிக்கு எதிராக சமூக வலைதளங்களில் அட்டாக் செய்யுங்கள் என்று நிர்வாகிகளுக்கு ராமதாஸ் உத்தரவிட்டதாக சொல்கிறார்கள் கூட்டத்தில் பங்கேற்றவர்கள்.

மேலும், அன்புமணிக்கு எதிராக பாமக இணை பொதுச்செயலாளரும் எம்.எல்.ஏ-வுமான அருள் கொடுத்த பேட்டியும் ராமதாஸ் அறிவுறுத்தலின் பேரில் தான் கொடுக்கப்பட்டதாக சொல்கிறார்கள்.
இந்தசூழலில், தொடர்ந்து மோதல் முற்றிவரும் நிலையில் தைலாபுரம் தோட்டத்திற்கு எதிராக சில வீடியோக்களையும் புகைப்படங்களையும் அன்புமணி ராமதாஸ் திரட்டி வருவதாக அன்புமணிக்கு நெருக்கமானவர்கள் தெரிவிக்கிறார்கள். ramadoss order his cadres attack