”அப்படி ஒன்னும் நல்லா ஆடல” – கவனம் ஈர்க்கும் ’பறந்து போ’ டிரெய்லர்!

Published On:

| By christopher

ram paranthu po trailer review june 26

தமிழ் சினிமாவில் எதார்த்தங்களை அப்படியே பிரதிபலித்து ரசிகளின் மனதில் நீங்கா இடம் பெற செய்யும் திரைப்படங்களை தரும் இயக்குநர்களின் முக்கியமானவர் ராம். அதற்கு அவரது கற்றது தமிழ், தங்க மீன்கள், பேரன்பு, தரமணி ஆகிய படங்களே சாட்சி. ram paranthu po trailer review june 26

அந்த வரிசையில் மிர்ச்சி சிவா, அஞ்சலி, கிரேஸ் ஆண்டனி, அஜு வர்கீஸ் ஆகியோரின் நடிப்பில் ராம் இயக்கியுள்ள திரைப்படம் தான் பறந்து போ. சந்தோஷ் தயாநிதி இசையமைத்துள்ள இப்படத்திற்கு யுவன் பின்னணி இசையமைத்துள்ளார்.

ஏற்கெனவே இப்படத்தின் ‘டாடி ரொம்ப பாவம்’ சன் பிளாவர் உள்ளிட்ட பாடல்கள் புதுமையான அனுபவத்தை தந்தன.

இப்படம் வரும் ஜூலை 4ஆம் தேதி ரிலீஸாகும் நிலையில், இன்று (ஜூன் 26) டிரெய்லர் வெளியாகி ரசிகர்களுக்கு படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரிக்கச் செய்துள்ளது.

அதில் பிடிவாதமான பள்ளி சிறுவனும், அவனுக்கு பிடித்தமானவற்றை செய்து தோற்றுப் போகும் அவனது தந்தையும் நகர வாழ்க்கையிலிருந்து விலகி மேற்கொள்ளும் பயணமும், அதில் தனது முன்னாள் காதலியை கண்டப்பிறகு ஏற்படும் மனச்சிக்கல் என டிரெய்லர் விரிகிறது.

Paranthu Po - Trailer | Ram | Shiva | Grace Antony | Anjali | Aju Varghese | Santhosh Dhayanithi
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share