மாநிலங்களவை தேர்தல்: முதல்வர் முன்னிலையில் திமுக மற்றும் கூட்டணி கட்சியினர் மனு தாக்கல்

Published On:

| By Pandeeswari Gurusamy

DMK

தமிழகத்தில் காலியாக உள்ள 6 மாநிலங்களவை இடங்களுக்கான தேர்தலில் போட்டியிட, திமுக மற்றும் அதிமுக கூட்டணிக் கட்சிகளின் வேட்பாளர்கள் இன்று (மார்ச் 5) தங்களது வேட்புமனுக்களைத் தாக்கல் செய்தனர்.

தமிழகத்திலிருந்து மாநிலங்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட திமுகவின் திருச்சி சிவா, என்.ஆர். இளங்கோ, அந்தியூர் செல்வராஜ், கனிமொழி சோமு, அதிமுகவின் தம்பிதுரை மற்றும் தமாகா தலைவர் ஜி.கே. வாசன் ஆகிய 6 உறுப்பினர்களின் பதவிக்காலம் வரும் ஏப்ரல் 2-ஆம் தேதியுடன் நிறைவடைகிறது. இதற்கான தேர்தல் மார்ச் 16-ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில், வேட்புமனுத் தாக்கலுக்கு இன்று கடைசி நாளாகும்.

ADVERTISEMENT
திமுக கூட்டணி வேட்பாளர்கள்:

சட்டமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் திமுக கூட்டணிக்கு 4 இடங்கள் கிடைப்பது உறுதியாகியுள்ளது.

இதில் திமுக சார்பில் திருச்சி சிவா மற்றும் கான்ஸ்டான்டைன் ரவீந்திரன் ஆகியோர் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.

ADVERTISEMENT

கூட்டணி கட்சிகளின் சார்பில் காங்கிரஸ் கட்சியின் கிறிஸ்டோபர் திலக் மற்றும் தேமுதிகவின் எல்.கே. சுதீஷ் ஆகியோர் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.

சென்னை தலைமைச் செயலகத்தில், தேர்தல் நடத்தும் அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ள சட்டப்பேரவை கூடுதல் செயலாளர் சாந்தியிடம் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் முன்னிலையில் இந்த நான்கு வேட்பாளர்களும் மனுக்களைத் தாக்கல் செய்தனர்.

ADVERTISEMENT

அதிமுக சார்பில் இன்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில், தம்பிதுரை மற்றும் அன்புமணி ராமதாஸ் ஆகிய இருவரும் தங்களது வேட்புமனுக்களைத் தாக்கல் செய்தனர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share