நல்லகண்ணு மறைவிற்கு ரஜினிகாந்த், விஜய் இரங்கல்

Published On:

| By Pandeeswari Gurusamy

Nallakannu

முதுபெரும் கம்யூனிஸ்ட் தலைவரும், சுதந்திர போராட்ட வீரருமான நல்லகண்ணு இன்று (பிப்ரவரி 25) உடல் நலக்குறைவால் காலமானார். அவரது மறைவிற்கு விஜய், நடிகர் ரஜினிகாந்த் உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

நடிகரும், தவெக தலைவருமான விஜய் தனது எக்ஸ் பதிவில், “சுதந்திரப் போராட்ட வீரர், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர், விவசாயிகளுக்காகவும் மக்களின் உரிமைகளுக்காகவும் தம் வாழ்நாளின் பெரும் பகுதியைச் செலவிட்ட போராளி, தோழர் அய்யா இரா.நல்லகண்ணூ காலமான செய்தியறிந்து மன வேதனை அடைந்தேன்.

ADVERTISEMENT

அவரது இழப்பு, இந்த நாட்டிற்கும் கம்யூனிஸ்ட் இயக்கத் தோழர்களுக்கும் ஈடு செய்ய முடியாத பேரிழப்பாகும். அவரைப் பிரிந்து வாடும் அவருடைய குடும்பத்தினருக்கும் உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த அனுதாபத்தைத் தெரிவித்துக்கொள்கிறேன்.”என தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் நடிகர் ரஜினிகாந்த் தனது எக்ஸ் பதிவில், “மறைந்த தோழர், அய்யா இரா. நல்லகண்ணு ஆன்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திக்கின்றேன்.” என தெரிவித்துள்ளார்.

ADVERTISEMENT

மாறாத கொள்கைப் பிடிப்புடன் வாழ்ந்து மறைந்த தோழர் நல்லகண்ணுவின் இழப்பு தமிழக மக்களுக்கு ஈடு செய்ய முடியாதது.

அவரது ஆத்மா சாந்தியடையட்டும். ஆழ்ந்த அனுதாபங்கள். ” என தெரிவித்துள்ளார்.

ADVERTISEMENT
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share