சிஎஸ்கே அணியை சேப்பாக்கம் மைதானத்தில் 17 ஆண்டுகளுக்கு பிறகு முதன்முறையாக வென்றுள்ளது ஆர்சிபி அணி. rajat patidar rcb won csk by 50 runs
சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை இன்று (மார்ச் 28) இரவு எதிர்கொண்டது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி.
டாஸ் வென்ற சென்னை அணி கேப்டன் ருத்துராஜ் பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி முதலில் பேட்டிங் செய்த ஆர்சிபி அணி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்பிற்கு 196 ரன்கள் குவித்தது.

அந்த அணியில் அதிகபட்சமாக கேப்டன் ரஜத் பட்டிதார் அரைசதம் (51) அடித்து ஆட்டமிழந்தார். சென்னை அணியை பொறுத்தவரை அதிகபட்சமாக நூர் அகமது 3 விக்கெட்டுகள் கைப்பற்றினார்.
தொடர்ந்து 196 ரன்கள் என்ற இமாலய இலக்கை நோக்கி பேட்டிங் செய்த சென்னை அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சி காத்திருந்து. ஹேசில்வுட் வீசிய 2வது ஓவரில் தொடக்க வீரர் திரிபாதி (5) மற்றும் ருத்துராஜ் (0) அடுத்தடுத்து ஆட்டமிழந்து வெளியேறினர்.
ஒரு முனையில் ரச்சின் ரவீந்திரா (41) போராடினாலும், மறுமுனையில் களம் புகுந்த மற்ற வீரர்கள் வந்த வேகத்தில் வெளியேறினர்.
20 ஓவர்கள் முடிவில் சிஎஸ்கே அணி 8 விக்கெட்டுகளை இழந்து 146 ரன்கள் மட்டுமே அடித்து தோல்வியை தழுவியது. 2 சிக்சர், 3 பவுண்டரியுடன் எம்.எஸ்.தோனி 30 ரன்கள் குவித்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார்.

இந்த போட்டியில் 50 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்ற பெங்களூரு அணி, 17 ஆண்டுகளுக்கு பிறகு சேப்பாக்கம் மைதானத்தில் சென்னையை தோற்கடித்துள்ளது.
கடைசியாக அந்த அணி கடந்த 2008ஆம் ஆண்டு சேப்பாக்கம் மைதானத்தில் சென்னை அணியை தோற்கடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.