மகாராஷ்டிரா மாநிலத்தில் இந்தி மொழியைத் திணித்தால் உதைதான் விழும் என மகாரஷ்டிரா நவநிர்மாண் சேனா தலைவர் ராஜ்தாக்கரே எச்சரித்துள்ளார்.
மும்பை மாநகராட்சி தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் பேசிய ராஜ்தாக்கரே, உ.பி., பீகார் மாநிலங்களைச் சேர்ந்த மக்களே! உங்களது தாய் மொழி இந்தி அல்ல. இதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும்.
நான் எந்த ஒரு மொழியையும் வெறுக்கவில்லை. ஆனால் ஒரு மொழியை என் மீது திணித்தால் உதைதான் விழும்.
மராத்திய மக்களே! இந்தியாவின் அனைத்து பகுதிகளில் இருந்தும் இங்கே வருகிறார்கள்.. உங்களது பங்கை அவர்கள் பறித்து செல்கிறார்கள். உங்கள் நிலமும் மொழியும் பறிபோனால் உங்கள் வாழ்க்கையும் முடிந்து போய்விடும். இன்றைக்கு உங்கள் வீட்டின் கதவுகளை இந்த பிரச்சனை தட்டிக் கொண்டிருக்கிறது.
மராத்திய மக்களே! இந்த தேர்தலை பயன்படுத்திக் கொள்ளாமல் போனால் ஒவ்வொரு மராத்தியனுக்கும் இதுதான் கடைசி தேர்தலாகிவிடும்.. உங்கள் கதையை முடித்தே விடுவார்கள்.. மராத்தி மொழிக்காகவும் மகாராஷ்டிரா மண்ணுக்காகவும் ஒற்றுமையுடன் நிற்போம் என்றார்.
