பொங்கல் பண்டிகைக்குள் பெண்களுக்கு தித்திப்பான திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் அறிவிக்க இருக்கிறார் என்று ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி தெரிவித்துள்ளார்.
திண்டுக்கல்லில் இன்று ஜனவரி 11-ந் தேதி நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் ஐ.பெரியசாமி, “ பெண்கள் பொங்கல் கொண்டாடுகிற நேரத்தில் தித்திப்பான செய்தி அரசின் சார்பில் விரைவில் வரும். பொங்கல் கொண்டாட்டங்கள் முடிவதற்குள் அந்த தித்திப்பான செய்தி வரும்” என பேசினார்.
