ரயில் கட்டணத்தில் 20% தள்ளுபடி சலுகையை அறிவித்து அசத்திய ரயில்வே!

Published On:

| By Mathi

Discount For Train Fares

பண்டிகை கால சலுகையாக, ரயில் டிக்கெட் கட்டணத்தில் 20% தள்ளுபடி குறித்த அறிவிப்பை ரயில்வே நிர்வாகம் வெளியிட்டுள்ளது.

கூட்ட நெரிசலைத் தவிர்க்கவும், தடை இல்லாத முன்பதிவுகளை உறுதி செய்யவும், பயணிகளுக்கு அதிக வசதி செய்து தரவும், பண்டிகை காலங்களில் அதிக தூரம் பயணிக்கும் பயணிகளின் போக்குவரத்தை வசதியானதாக மாற்றவும் ரயில்வே நிர்வாகம் முக்கிய நடவடிக்கைகளை எடுத்துள்ளது.

ADVERTISEMENT
  • அக்டோபர் 13-ந் தேதி முதல் 26-ந் தேதி வரை ரயிலில் பயணம் செய்யும் நீங்கள், நவம்பர் 17 முதல் டிசம்பர் 1 வரை அதே ரயிலில் ரிட்டர்ன் ஆனால் ரிட்டர்ன் டிக்கெட்டில் 20% தள்ளுபடி கிடைக்கும்.
  • இந்த ரயில் கட்டண சலுகை ராஜ்தானி, சதாப்தி, தூரந்தோ ரயில்களுக்கு பொருந்தாது
  • இந்தத் திட்டத்தின் கீழ் முன்பதிவு செய்யப்பட்ட பயணச் சீட்டுகளுக்கு கட்டணம் திரும்பப் பெற அனுமதிக்கப்படாது.
  • எந்தவொரு பயணத்திலும் இந்த பயணச் சீட்டுகளில் தேதி உள்ளிட்ட எந்த மாற்றமும் அனுமதிக்கப்படாது.
  • சலுகை கட்டணத்தில் திரும்பும் பயண முன்பதிவின் போது தள்ளுபடிகள், ரயில் பயண கூப்பன்கள், வவுச்சர் அடிப்படையிலான முன்பதிவுகள், பாஸ்கள் அல்லது பிடிஓ (PTO)-கள் போன்றவை அனுமதிக்கப்படாது.
  • பயணச் சீட்டுகளையும், திரும்பும் பயணச் சீட்டுகளையும் ஒரே முறை முன்பதிவு செய்ய வேண்டும்.
  • இணைய (ஆன்லைன்) முன்பதிவு
  • முன்பதிவு அலுவலகங்களில் உள்ள முன்பதிவு மையங்களில் முன்பதிவு செய்யலாம்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share