கரூரில் நடந்த விஜய்யின் தவெக பிரச்சாரக் கூட்டத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 36 ஆக உயர்ந்துள்ளது. 62 பேர் சிகிச்சை பெற்று வரும் நிலையில் பலி எண்ணிக்கை அதிகரிக்கக் கூடும் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது. பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா, மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
ராகுல் காந்தி தனது எக்ஸ் பதிவில், கரூரில் ஏற்பட்ட துயர சம்பவத்தை அறிந்து மிகுந்த வருத்தமடைந்துள்ளேன். அதில் விலைமதிப்பற்ற உயிர்கள் பறிபோயுள்ளன. உயிரிழந்தவர்களின் அன்புக்குரியவர்களுக்காக என் இதயம் துடிக்கிறது. காயமடைந்தவர்கள் விரைந்து நலம்பெற வேண்டுகிறேன். பாதிக்கப்பட்டவர்களுக்கும் அவர்தம் குடும்பங்களுக்கும் தங்களால் இயன்ற அனைத்து உதவிகளையும் செய்யுமாறு காங்கிரஸ் தொண்டர்களையும், தலைவர்களையும் வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன். அதிகாரிகளுடன் கைகோத்து மீட்பு மற்றும் நிவாரண பணிகளில் ஈடுபடுமாறும் கேட்டுக் கொள்கிறேன்’ என குறிப்பிட்டுள்ளார்.