கடந்த 10 வருடங்களாக ஐ.பி.எல். போட்டிகள் பெரும் வரவேற்பினை பெற்றுவர காரணம் புதுமையான அணிகள், விறுவிறுப்பான போட்டிகள், கிரிக்கெட் உலகின் பல நாட்டு வீரர்கள் வெவ்வேறு அணிகளில் கலந்து விளையாடுகிறார்கள் என்பதினால்தான். இந்த வகையான போட்டிகள் கால்பந்து போட்டிகளில் இருந்துதான் உருவாக்கப்பட்டன. ஐ.பி.எல். தொடரில் ஒவ்வொரு வருடமும் மிக அதிக விலைக்கு ஏலம் பெறப்பட்ட வீரர்கள் முக்கிய கவனம் பெறுவார்கள். அதன்படி கால்பந்திலும் இந்த சீசனுக்கான ட்ரான்ஸ்ஃபர்கள் முடிவடைந்து அதிக தொகைக்கு ஒப்பந்தம் செய்யப்பட்ட முதல் 10 வீரர்களின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. மெஸ்ஸி மற்றும் ரொனால்டோ ஆகிய முக்கிய வீரர்கள் நிச்சயம் இதில் இடம் பிடிப்பார்கள் என்று அனைவரும் அறிந்ததே. ஆனால், முதல் இடம் யாருக்கு என்பதுதான் பெரும் போட்டியாக இருந்தது. இந்த வருடத்தின் முதல் 10 வீரர்கள் பட்டியல் கீழே
1. மெஸ்ஸி
சந்தேகம் தேவையில்லை இந்த சீசனுக்கான அதிகத் தொகைக்கு ஒப்பந்தம் செய்யப்பட்ட வீரராக மெஸ்ஸி தேர்வு செய்யப்பட்டுள்ளார். இவர் தற்போது விளையாடிவரும் பார்சிலோனா அணிக்கு கடந்த 12 ஆண்டுகளாக விளையாடி வருகிறார். இவரது சிறந்த ஆட்டத்தால் பல்வேறு வெற்றிகளை கண்டுள்ளது பார்சிலோனா அணி. எனவே இவரைப் பெற பல்வேறு அணிகள் முயற்சித்தாலும், பார்சிலோனா அணி விட்டுக்கொடுக்காமல் கடும் போட்டியிடுகிறது. இந்த சீசனிலும் மான்செஸ்டர் சிட்டி அணி மெஸ்ஸியை 100 மில்லியனுக்கு ஒப்பந்தம் பெற முயற்சி செய்தது. ஆனால், அதற்கு போட்டியாக 120 மில்லியனுக்கு மெஸ்ஸியை தக்கவைத்துக் கொண்டுள்ளது பார்சிலோனா.
2. நெய்மர் :
இரண்டாவது இடம் ரொனால்டோ என்றுதான் பல்வேறு ரசிகர்களுக்கும் தோன்றும். ஆனால், இரண்டாம் இடத்தை பார்சிலோனா அணியின் மற்றொரு வீரர் நெய்மர், 2 மில்லியன் முன்னிலையில் தட்டிச் சென்றுள்ளார். கால்பந்து போட்டிகளில் இளம் வீரராக இந்த இடத்தை பிடிப்பது மிக கடினம். இருப்பினும் தலைசிறந்த அணியான பார்சிலோனா இவரது திறமையை கண்டு இன்னும் 5 வருடங்களுக்கு ஒப்பந்தம் செய்துள்ளது. 102 மில்லியன் பெற்று இவர் இரண்டாவது இடத்தில் உள்ளார். இரண்டு பெரும் கால்பந்து ஜாம்பவான்களை தொடர்ந்து தற்போது அதிகம் கவனத்தை ஈர்க்கும் வீரராக மாறியுள்ளார் நெய்மர்.
3. ரொனால்டோ:
பார்சிலோனா அணியின் பெரும் சவாலான அணி ரியல் மேட்ரிட். இதில் பல சிறந்த வீரர்கள் இருந்தாலும் அணியின் முக்கிய வீரராக திகழ்பவர் ரொனால்டோ. கடந்த ஆண்டு மட்டும் இவர் பெற்ற விருதுகள் பல. இவர் இந்த முறை 100 மில்லியன் பெற்று அதிக தொகைக்கு ஒப்பந்தம் பெறப்பட்ட வீரர்கள் பட்டியலில் மூன்றாவது இடத்தை பிடித்துள்ளார்.
இவர்களைத் தொடர்ந்து மற்ற வீரர்கள் பெயர் மற்றும் அவர்களின் ஓப்பந்த தொகை கீழே…
4. Luis Suarez (Barcelona) – €90 million
5. Gareth Bale (Real Madrid) – €90 million
6. Antoine Griezmann (Atletico Madrid) – €82 million
7. Paul Pogba (Manchester United) – €80 million
8. Robert Lewandowski (Bayern Munich) – €80 million
9. Gonzalo Higuain (Juventus) – €75 milliongonzalo
10. Eden Hazard (Chelsea) – €70 millioneden
